சூர்யா மீது பகையை மறக்காத வடமாவட்ட மக்கள்… திருப்பி அடிக்க இது தான் சரியான நேரம்.. என்ன தெரியுமா.?

0

நடிகர் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய படம் ஜெய் பீம். இந்த படத்தில் வன்னிய சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்கின்ற குற்றச்சாட்டு எழுந்து, நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படத்திற்கு எதிராக வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆனால் தனக்கு எதிராக வந்த எதிர்ப்புகளை சூர்யா பொருட்படுத்தாமல், ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சை கூறிய காட்சிகளில் எந்த தவறும் இல்லாதது போன்றும், தன் பக்கம் தான் நியாயம் உள்ளது, என்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டார். இது ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வட மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர் சமூகத்தினர் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்ப்படுத்தியது.

சூர்யாவை தங்கினால் பரிசு வழங்கப்படும் என்று, வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக பேசினார். அதேபோன்று மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் அனல் அரசு, துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசாரால் சூர்யாவை பாதுகாத்திட முடியாது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வன்னிய மக்கள் ஓன்று சேர்ந்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா.? என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அப்போதே, இது குறித்து சூர்யா மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் சூர்யா அதை செய்யாததால் தொடர்ந்து பல்வேறு சிக்கலை சந்தித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் படம் வெளியான போது, வன்னிய சமூகத்தினர் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் சூர்யா படத்தை புறக்கணித்தனர்.

இதன் விளைவாக வட மாவட்டங்களில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட பல திரையரங்குகள் முன்வரவில்லை, அப்படி வெளியிட்ட திரையரங்குகளில் படம் பார்க்க ஆட்கள் இல்லாமல், மிக பெரிய நஷ்டத்தை சந்தித்தது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம். இந்நிலையில் சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் சகார்த்திக் நடிக்கும் விருமன் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தை புறக்கணித்து மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க வைத்தது போன்று சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் வெளிவர இருக்கும் விருமன் படத்தையும் மண்ணை கவ்வ வைத்து வன்னியர்கள் யார் என்பதை காட்ட வேண்டும், திருப்பி அடிக்க இது தான் சரியான நேரம் என வன்னிய சமூகத்தினர் மற்றும் பாமகவினர் தற்பொழுது தொடங்கி சமூக வலைதளத்தில் பிரச்சார பதிவுகளை செய்து வருகின்ற்றனர்.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் வன்னிய சமூக மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியது போன்று, விருமன் படத்தின் போதும் வன்னியர்கள் ஒன்றிணைந்து இந்த படத்தை புறக்கணித்து வட மாவட்டங்களில் மிகப்பெரிய நட்டத்தை சந்திக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருவதால், சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தை வாங்க வடமாவட்ட திரையரங்குகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும் ஜெய் பீம் படத்தில் வன்னிய சமூகத்தை இழிவு படுத்திய சூர்யாவிற்கு வன்னியர்களின் பணம் ஒரு ரூபாய் கூட செல்ல கூடாது. என ஜெய்பீம் பகையை மறக்காமல் சூர்யா படத்தை புறக்கணிப்பதில் வடமாவட்ட மக்கள் தீவிரம் காட்டி வருவது விருமன் படம் அதன் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால் சூர்யா மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவிக்க முன் வர வேண்டும் என்கிறனர் சினிமா பார்வையாளர்கள்.

தேவயானி, ரம்பாவை தூக்கிய அன்புச்செழியன்… வாங்கிய பணத்திற்கு என்ன செய்தார் தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here