அன்புசெழியனை வைத்து தனுஷ்க்கு தண்ணி காட்டி தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட ரஜினிகாந்த் குடும்பம்.!

0

கடந்த ஜனவரி மாதம் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவருடைய கணவர் நடிகர் தனுஷ் இருவரும், அவர்களுடைய சுமார் 17 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர். இதன் பின்பு இவர்கள் பிரிவை ஏற்றுக்கொள்ளாத ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் தன்னுடைய குடும்பத்தினரும் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் விருப்பத்திற்கு மீண்டும் பிரிந்த தம்பதியினரை இணைக்கும் வைக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் ஈடுபட்டனர். ஆனால் தனுஷ் திட்டவட்டமாக மறுத்ததாக தெரிகிறது. இதன் பின்பு மனைவி ஐஸ்வர்யா பிரிந்த பின்பு தொடர்ந்து சினிமாவில் சோதனை மேல் சோதனையை சந்தித்து வந்தார் தனுஷ். அவர் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், கதையாசிரியர்கள் என ஒவ்வொருவராக பாதியில் விலகி கொண்டனர்.

இது தனுஷ் நடிக்கும் படங்களில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இது போன்ற செயலுக்கு பின்னணியில் ரஜினிகாந்த் குடும்பத்தை சேர்ந்த அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் அவருடைய மகள்கள் இருப்பதாக கூறப்பட்டது. நடிகர் தனுசுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுத்து அவரை தங்களிடம் சரணடைய செய்ய வைத்து, தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ரஜினிகாந்த் குடும்பத்தினரின் திட்டமாக இருந்துள்ளது.

அதாவது பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செரியனிடம் நெருக்கமாக இருந்து வந்த ரஜினிகாந்த் குடும்பத்தினர், அன்பு செழியன் மூலம் தனுசுக்கு சினிமாவில் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய மாட்டேன், தனுஷ் நடிக்கும் படங்களை வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு கடன் கொடுப்பதில்லை என மறைமுகமாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் அன்புச் செழியன்.

இதன் காரணமாகத்தான் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வராத நிலையில், இந்த படம் திரைக்கு வர முடியாமல் நேரடியாக OTTயில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்த பின்பு சினிமாவில் பல்வேறு சோதனைகளையும், சந்தித்து வந்த தனுஷ் தற்பொழுது புத்துணர்ச்சி பெற்றுள்ளார்.

சமீபத்தில் தனக்கு எதிராக ரஜினிகாந்த் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வந்த அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐ டி ரெய்டு காரணமாக அன்புசெழியன் தொழில் மொத்தமும் முடங்கியுள்ளது. மேலும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் அன்புச்செழியனிடம் முதலீடு செய்த பணமும் ஐடி ரெய்டில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களுடைய பணத்தையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முக்கிய புள்ளிகளின் உதவிகளை தேடி ரஜினிகாந்த் மூலம் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ரஜினிகாந்த் குடும்பத்தினர். தனுஷ்க்கு எதிராக அன்புச்செழியனை வைத்து ஆட்டம் காண்பித்த ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு அன்புச்செழியன் வாயிலாகவே தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தனுஷ் மொத்த குடும்பமும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நீண்ட இடைவேளைக்கு பின்பு தனுஷ் முகத்தில் ஒரு மகிழ்ச்சி காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை என மறைமுகமாக தனக்கு எதிராக சதி செய்த ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு அட்வைஸ் செய்யும் நோக்கில் தான் தனுஷ் பேசினார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கதவை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்… அன்புசெழியன் வீட்டின் கதவின் சிறப்பு என்ன தெரியுமா.?