நயன்தாரா செய்த விசேஷ சிகிச்சை… பக்கவிளைவுகளால் கடும் அவதி…. என்ன சிகிச்சை தெரியுமா.?

0

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு தாய்லாந்து சென்று ஜாலியாக ஹனிமூன் கொண்டாடியவர்கள்.பின்பு மும்பையில் நடக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன் சென்னையில் நடந்த சர்வதேச செஸ் விளையாட்டு போட்டியில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் பிஸியானார்.

நயன்தாரா நடிப்பில் திருமணத்திற்கு முன்பு கடைசியாக வெளியான படம் அவருடைய கணவர் விக்னேஷ் இயக்கத்தில் காற்று வாக்கில் இரண்டு காதல். இந்த படத்திற்கு முன்பு நயன்தாரா தனது உடல் எடையை குறைக்க நவீன சிகிச்சை மேற்கொண்டார். இந்த சிகிச்சை மூலம் தனது உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கியுள்ளார் நயன்தாரா. ஆனால் இந்த சிகிச்சைக்கு முன்பு உடலில் சிறிது சதை இருந்தாலும் இளமையுடன் அழகாக காட்சியளித்தார் நயன்தாரா.

ஆனால் நயன்தாரா மேற்கொண்ட நவீன சிகிச்சைக்கு பின்பு எலும்பும் தோலுமாக, முகத்தில் டொக்கு விழுந்து மற்றும் கழுத்தில் தோல்கள் சுருங்கி, ஒரு முதுர்கன்னி போல் காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் காட்சியளித்தார். மீண்டும் தன்னுடைய பழைய அழகை மீட்டெடுத்து இளமையுடன் காட்சியளிக்க, திருமணத்திற்கு பின்பு நயன்தாரா சுமார் ஆறு மாதம் கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அவர் கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால், ஆயுர்வேத சிகிச்சையை செய்வதில் காலதாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இருந்த நயன்தாராவுக்கு திடீரென அவருடைய தோளில் அலர்ஜி ஏற்பட்டு உடலில் உள்ள பல்வேறு இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் உடலில் அரிப்பும், வாந்தியும் அதிகமானதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீடிரென சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு காரணமாக ஏற்பட்ட அலர்ஜி தான் என்று நயன்தாரா தரப்பில் கூறப்பட்டு. மேலும் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பிய நயந்தாரா, ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்து பின்பு மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வர் என கூறப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா காற்று வாக்கில் இரண்டு காதல் படத்திற்கு முன்பு அவரது உடலில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்காக முறையான உடற்பயிற்சி செய்யாமல், நவீன சிகிச்சை செய்து கொண்டதின் காரணமாக ஏற்பட்ட பக்க விளைவு தான் தற்பொழுது நயன்தாரா உடலில் அலர்ஜி ஏற்பட்டு அரிப்பு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இரண்டு நாள் ஓய்வுக்கு பின்பு மீண்டும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில், திடீரென்று கணவருடன் பத்து நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். ஆனால் தனது உடலின் மீண்டும் அலர்ஜி மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க, மீண்டும் தனது இளமை தோற்றத்தை கொண்டு வருவதற்கு ஒரே தீர்வு ஆயுர்வேத சிகிச்சை தான் என நயன்தாராவின் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.

இதனால் விரைவில் தன் கைவசம் இருக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் ஆயுர்வேத சிகிச்சையை நயன்தாரா மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் தீடிர் பயணமாக கணவருடன் ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா உயர்தர சிக்கிச்சைக்காகவும் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

கதவை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்… அன்புசெழியன் வீட்டின் கதவின் சிறப்பு என்ன தெரியுமா.?