ரஜினியை சிக்க வைத்த இரண்டு மகள்கள்…. அன்புச்செழியன் விவகாரத்தில் என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் மெகா ரெய்டு என அழைக்கப்படும் வருமான வரித்துறை சோதனையில், சினிமா திரையுலகை சார்ந்த பல முக்கிய பிரபலங்கள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பணத்தை அன்புச்செழியனிடம் முதலீடு செய்துள்ளார். அந்த பணம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

சினிமாவில் நடிப்பது தவிர்த்து, இதர தொழில் அனைத்தும் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது இரண்டு மகள்கள் உட்பட குடும்பத்தினர் தான் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலை செய்து வந்ததாக ஏற்கனவே ரஜினிகாந்த் வருமான வரி துறையினரிடம் தெரிவித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு இது செய்தியாக வெளியானது.

அந்தச் செய்தியில் 2002 முதல் 2003 ஆம் ஆண்டு நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாயை, தனக்கு நெருங்கியவர்களிடம் வட்டிக்கு கடனாக கொடுத்த ரஜினிகாந்த்.அந்த பணத்திற்கு வட்டியாக 1 லட்சத்து 19 ஆயிரம் கிடைத்ததாக வருமான வரித்துறையிடம் ரஜினிகாந்த் கணக்கு காட்டி இருந்தார். இதனால் அன்புச் செழியனிடம் தன்னுடைய பணத்தை முதலீடு செய்து. அவர் மூலம் ரஜினிகாந்த் வட்டில் வட்டி தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் இரண்டு மகள்களும் சினிமாவில் இயக்குனராக நுழைந்த பின்பு சினிமா துறையை சேர்ந்தவர்கள் மூலம் அன்புச்செழியன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்பு ரஜினிகாந்த் மனைவி லதா ஆகியோருடன் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அன்புச்செழியன். தன்னுடைய தொழில் குறித்து லதா மற்றும் அவருடைய இரன்டு மகள்களிடம் தெரிவித்துள்ளார் அன்புசெழியன்.

தன்னை நம்பி அரசியல் புள்ளிகள் முதலீடு செய்வதும் பின்பு அவர்களுக்கு லாபமாக அந்த பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்பதையும் ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் அன்புசெழியன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பா சம்பாதிக்கும் பணத்தை அன்புச்செழியனிடன் முதலீடு செய்து, அந்த பணத்தின் மூலம் மேலும் பணம் சேர்க்க திட்டமிட்ட ரஜினிகாந்த் இரண்டு மகள்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை அன்புசெழியனிடம் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்பு ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பழக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அன்புசெழியன் மகள் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். அன்புசெழியனிடம் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் முறையாக ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில். அவர்களும் இது நல்ல தொழிலாக இருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது நடைபெற்ற அன்பு செழியனுக்கு சொந்தமான வருமான வரித்துறை சோதனையில். அன்பு செழியனிடம் முதலீடு செய்யப்பட்டிருந்த ரஜினிகாந்த் பணம் சிக்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில். இதற்காக தான், தன்னையும் தன்னுடைய பணத்தையும் காப்பாற்ற அவசரமாக டெல்லி சென்று சில முக்கிய புள்ளிகளை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வயதான காலத்தில் நிம்மதியில்லாமல் பல்வேறு சிக்கலில் ரஜினியை சிக்க வைத்துள்ள இரண்டு மகள்களும். ஒரு படத்திற்கு அவருடைய தந்தை ரஜினிகாந்த் சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இந்த பணம் இரண்டு மகள்களுக்கு போதவில்லையா.? எதற்காக பேராசையின் காரணமாக அன்புசெழியனிடம் முதலீடு செய்து அவருடைய தந்தையின் நிம்மதிக்கு வேட்டு வைக்க வேண்டும் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

கதவை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள்… அன்புசெழியன் வீட்டின் கதவின் சிறப்பு என்ன தெரியுமா.?