அபிநந்தனான சிவகார்த்திகேயன்.. காஷ்மீரில் படப்பிடிப்பு.. என்ன கதை தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்து தற்பொழுது லியோ பட குழு சென்னை திரும்பியுள்ளது. லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று கொண்டிருந்த போதே காஷ்மீர் சென்ற சிவகார்த்திகேயன் புதிய படத்திற்கான லொக்கேஷன் தேர்வில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். ‘மாவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.

மாவீரன் படத்தின் முதல் பாடலான ‘சீனா சீனா’ பாடல் சமீபத்தில் வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது, சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த படம் மாவீரன் மிக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் மாவீரன் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள சிவகார்த்திகேயன், அந்த படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது, சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த சில சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது, இந்த படம் பெரும்பாலும் காஷ்மீரில் படமாக்கப்பட இருப்பதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்பு நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில்.

இந்தியா ராணுவ வீரர் அபிநந்தன் பாக்கிஸ்தானில் சிக்கி கொண்டார், அப்போது அவரை பத்திரமாக மீட்டு வந்தது இந்தியா, இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அபிநந்தனின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் கதை என கூறப்படுகிறது.