ரஜினி என்ன பெரிய யோக்கியமா.? மாமனாரை பந்தாடிய தனுஷ்…. வேதனையில் ரஜினி என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவர்கள் காதலிக்கும் தகவல் அறிந்த ரஜினிகாந்த் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், உடனே தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசி இவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தவர் ரஜினிகாந்த். மேலும்,மருமகன் தனுஷ் மீது அளவற்ற மரியாதையும் ரஜினிகாந்துக்கு உண்டு என கூறப்படுகிறது.

தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து முன்னனி நடிகர் வரிசையில் இடம் பிடித்திருந்தாலும், அடுத்தடுத்து அவர் சினிமாவில் பல சரிவுகளை சந்தித்த போது காப்பாற்றியவர் மாமனார் ரஜினிகாந்த், மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடக்கி படம் தயாரித்து வந்த தனுஷ் பெரும் கடன் சுமையில் தத்தளித்து வந்தார். அப்போது மாமனார் ரஜினிகாந்த் உதவியை மனைவி ஐஸ்வர்யா மூலம் நாடினர் தனுஷ்.

உடனே காலா படத்தை தனுஷ் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து அதில் கிடைத்த லாபத்தில் கடனை அடைத்து மருமகன் தனுஷை கடன் சுமையில் இருந்து காப்பாற்றியவர் ரஜினிகாந்த். இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்த பின்பு வேதனையில் இருந்த ரஜினிகாந்த் மீண்டும் இவர்கள் இணைந்து வாழ்வது தான் சரி என அவரின் விருப்பத்துக்கு ஏற்ப தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் குடும்பத்தினர்.

பிரிந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினரை இணைத்து வைக்க நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில். ஒரு கட்டத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர்கள், உன் மாமனார் செய்த உதவியை நினைத்து பார்த்து அவருடைய விருப்பதுக்காவது நீங்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும், அவர் இல்லை என்றால் நீங்க எப்போதே சினிமாவில் காணாமல் போயிருபீங்க, நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடத்திய ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் தனுஷிடம் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு டென்ஷனான தனுஷ் கோபத்துடன் ரஜினியை வசைபாடியுள்ளார், அப்போது அவர் எவ்வளவு பெரிய மனிதர் அவரை இப்படி நீ பேசுவது தவறு என அறிவுரை வழங்கியவர்களிடம், அவர் என்ன பெரிய யோக்கியமா.? என பதிலளித்த தனுஷ் மேலும், சினிமா இண்டஸ்ட்ரீஸ் பழைய ஆட்களிடம் கேட்டால் தெரியும் அவரது வண்டவாளம் என்ன என்பது என தனுஷ் பேசியது பற்றி ரஜினிகாந்த் குடும்பத்தினர் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த ரஜினிகாந்த் எந்த ஒரு பதிலும் பேசாமல் வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளார், இதன் பின்பு தான் தனுஷ் உடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் வந்துள்ளனர், மேலும் நடிகைகளுடன் அடிக்கடி கிசு கிசுவில் தனுஷ் சிக்கி வந்த போது ஐஸ்வர்யா – தனுஷ் இடையே நடக்கும் சண்டையின் போதும் கூட உன் அப்பா பெரிய யோக்கியமா என அடிக்கடி தனுஷ் இந்த வார்த்தையை பயன்படுத்துவர் என கூறப்படுகிறது.

பாலா மனைவி வெளிநாட்டில் கள்ள காதலனுடன் அஜால் குஜால்…. யார் அந்த கள்ள காதலன் தெரியுமா.?

error: Content is protected !!