நான்கு மாநில தேர்தல் முடிவு… துடைத்து எறியப்பட்ட காங்கிரஸ்.. மகிழ்ச்சியில் திமுக தலைமை..! எதற்கு தெரியுமா..

0
Follow on Google News

உத்திரபிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலக்களில் நடந்து முடித்த தேர்தலில் பாஜக மீண்டும் தனது பலம் என்ன என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நிரூபிக்கும் வகையில் அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்திரபிரதேச தேர்தலுக்கு ஒரு வருடங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர்,மேலும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

2024 நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் உத்திரபிரதேச சட்டசபை தேர்தல் என்பதால் இந்த தேர்தலின் முடிவுகளை இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் மிக அவளுடன் எதிர்பாத்திருந்தனர், 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் 255 தொகுதிகளுக்கு மேல் முன்னணி வகித்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை அங்கு தக்க வைக்கிறது, காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டும் வென்று அந்த கட்சி இருந்த தடம் கூட தெரியாமல் உத்திரபிரதேச மக்கள் துடைத்து எறிந்துள்ளனர்.

மேலும் பஞ்சாபில் ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் இம்முறை தோல்வியை தழுவி ஆட்சியை இழந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிக பெரிய பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளின் நம்பிக்கையையும் இழந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்து காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது என தேடும் அளவுக்கு உள்ள காங்கிரஸ் கட்சிக்கு.

10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக, இதில் திமுக மீது சவாரி செய்து 9 தொகுதிகளை வென்றது, இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தம் தான் என கூறப்பட்டது. இதன் பின்பு சுதாரித்து கொண்ட திமுக அடுத்தடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல், தமிழக சட்டசபை தேர்தல்களில் நடந்த தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கியது மட்டுமின்றி தகுந்த மரியாதை கூட கொடுக்கவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 4 அல்லது அதிகபட்சம் 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க கூடாது என்கிற முடிவில் திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான வெற்றியை பெற்று இருந்தாலும் கூட அது வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளிடம் அதிக தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்கும் சூழல் உருவாகி இருக்கும்.

ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொடுக்கும் தொகுதியை தான் பெற்று கொள்ள முடியும் என்கிற சூழல் அமைந்துள்ளது, அதிகம் பேசினால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டி விடவும் திமுக தயங்காது என்று கூறப்படுகிறது. அந்த விதத்தில் காங்கிரஸ் தற்போது நடந்த தேர்தல்களில் சந்தித்த தோல்விகள் திமுகவுக்கு இனி வரும் தேர்தல்களில் தொகுதி ஒதுக்குவதில் சாதகமாக அமைத்துள்ளதால், இந்த தேர்தல் முடிவுகளால் திமுக தலைமை மகிச்சியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.