தயங்கிய தமிழ் சினிமா நட்சத்திரம்.. தரமான சம்பவம் செய்து தமிழர்க்கு பெருமை சேர்ந்த ராஜமௌலி…

0
Follow on Google News

உலகில் மூன்றில் ஒரு பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் ராஜா ராஜா சோழன், உலகில் முதல் முதலில் முப்படைகளை கட்டியமைத்து எதிரிகளை குலை நடுங்க செய்த்தவர் சோழ மன்னன், கடல் கடந்து இந்தோனீசியா வரை சென்று ஆட்சி புரிந்ததற்காக வரலாற்று சான்றுக்கு ஆதாரமாக, இன்றும் சோழ மன்னனின் கட்டிட கலை கம்பிரமாக இந்தோனீசியாவில் இருப்பதே சாட்சி, சோழ மன்னர்களில் போர் வரலாற்றில் தோல்வி என்பதே கிடையாது.

அதே போன்று கட்டிட கலைகளிலும் கை தேர்ந்தவர்கள் சோழ மன்னர்கள், 1000 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்றும் கம்பிரமாக காட்சியளிப்பது ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர செய்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் உலக ஆராய்ச்சியாளர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் இருக்கிறது. 1000 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு டெக்னலாஜியும் இல்லாமல் தஞ்சை பெரிய கோவிலை எப்படி ராஜா ராஜா சோழன் காட்டியிருப்பார் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஓன்று.

இப்படி பல பெருமைகளுக்கு சொந்தமான தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்த பல அமைச்சர்கள் பதவி பறிபோனது,மேலும் கருணாநிதி, இந்திரா காந்தி போன்றவர்கள் தஞ்சை பெரிய கோவிலால் தான் பதவியை இழந்தார்கள் என்றும், இதன் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு முன் வாசல் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்றார் என்கின்ற தஞ்சை கோவிலை பற்றிய தவறான வதந்திகள் மக்கள் மத்தியில் உலாவி கொண்டிருக்கிறது.

இந்த வதந்தி சுமார் 1000 வருடங்களுக்கு மேலாக தமிழனின் பெருமையை உலகம் அறிய செய்யும் வகையில் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலை சிறுமை படுத்த வேண்டும் என்கிற நோக்கில் யாரோ கிளப்பி விட்ட வதந்தி எனபதை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னனி பிரபலம் கூட அதை உண்மை என நம்பி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தஞ்சை பெரிய கோவில் உள்ளே படமாக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள் பல அபார வெற்றி பெற்று வதந்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்து இருந்தாலும் கூட, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா தஞ்சை பெரிய கோவிலில் மிக பிரமாண்டமாக நடத்த படவேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர், ஆனால் தஞ்சை பெரிய கோவில் உள்ளே நிகழ்ச்சி நடந்தால், தஞ்சை பெரிய கோவில் குறித்து பரவி வரும் வதந்திகளை உண்மை என நம்பும்
சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார்கள் என்பதால் சென்னையில் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வதந்திகளை உண்மை என நம்பி தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வரும் நிலையில், பிரபல பேன் இந்தியா பட இயக்குனர் ராஜமௌலி சமீபத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டுள்ளது, தஞ்சை பெரிய கோவில் குறித்து குழப்பத்தில் இருக்கும் தமிழக பிரபலங்களுக்கு தரமான பதிலடி சம்பவமாக அமைத்துள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட இயக்குனர் ராஜமௌலி, ஸ்ரீரங்கம், தாராசுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், காணாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு சென்ற ராஜமௌலி, பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் கட்டிடக்கலையும் ஆன்மீக எண்ணமும் மதிமயக்குவதாக இருந்தது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மேற்கொண்ட ஆன்மீக பயணத்தை வீடியோவாக வெளியிட்டு தமிழனின் கட்டிட கலையை உலகம் அறிய செய்யும் வகையில் ஒவ்வொரு தமிழனையும் பெருமை படுத்தும் வகையில் அமைத்துள்ளது ராஜமௌலியின் இந்த செயல் என பலரும் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.