சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது…மகிழ்ச்சியில் “சூரரை போற்று” திரைப்படம் குழுவினர்.

0
Follow on Google News

சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதில் பட குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சுதா கே பிரசாத் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது. இந்தியாவில் புகழ் பெற்ற பிரபல தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த திரைப்படம் மதுரை சுற்றியுள்ள பகுதியில் தான் எடுக்கப்பட்டது.

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான் பேன்ற திரைப்படங்கள் தேல்வியை கொடுத்தாலும் சூரரை போற்று திரைப்படம் வெற்றியை கொடுத்துள்ளது. சூர்யாவின் கடினமான உழைப்பு தான் காரணம். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் சூரரை போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது. ஓடிடி யில் வெளியானாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது சூரரைப்போற்று திரைப்படம், ஆஸ்கார் விருதுக்காக 366 திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மார்ச் 5 – 10 வரை வாக்குப்பதிவும், 15-ல் இறுதி பரிந்துரைப் திரைப்பட பட்டியலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகுமா?