மாடத்தி திரைப்படம் எப்படி இருக்கு? ஒரு பார்வை…

0

இந்த மாடத்தி என்ற தமிழ் திரைப்படத்தை லீனா மணிமேகலை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்க்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் செம்மலர் அன்னம், அஜ்மினா கஸ்ஸிம், அருள் குமார், பேட்ரிக் ராஜ் போன்றவர்கள் நடித்துள்ளனர். மாடத்தி திரைப்படம் இரு சமூகத்திற்கும் இடையே ஜாதி ஏற்றத்தாழ்வை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒரு மலை அருகில் உள்ள கிராமத்தில் உயர்ந்த மற்றும் தாழ்ந்த சமூகம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.

இங்கு என்ன சமூகத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை ஒதுக்கி வைத்துள்ளார்கள். உயர்ந்த சமூகத்தினர் மலை அருகில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் தாழ்ந்த சமூகத்தினர் மலையில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட சமூகமாக சொல்லப்படுபவர்கள் உயர்ந்த சமூகத்தினரை பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்து விட்டால் அதை திட்டாக கருதி சில கொடுரமான தண்டனைகளையும் வழங்குவார்கள்.

இந்த திரைப்படத்தின் தொடக்கத்தில் கணவன் மனைவி இருவர் இருசக்கர வாகனத்தில் மாடத்தி அம்மனை தரிசிக்கச் செல்கிறார்கள். அப்போ து மனைவிக்கு மாதவிடாய் ஏற்படுகிறது. அந்த இடத்தில் மனைவி நட்பின் கேட்கிறாள். கணவன் இந்த இடத்தில் எப்படி இருக்கும் என்று அருகில் இருக்கும் குடிசையை பார்த்தவுடன் அங்கே ஏதாவது உதவி கிடைக்குமா என்று போகிறான் கணவன். போனவன் திரும்பி வரவில்லை அவனைத்தேடி அந்த குடிசை பகுதிக்குள் மனைவி செல்கிறாள். குடிசைக்குள் நுழைந்தவுடன் வரைந்து தொங்கவிடப்பட்ட படங்களை பார்த்து வியந்து போகிறான் இப்படி ஒரு இடத்தில் இவ்வளவு அழகாக படங்களையும் யார் வரைந்தது என்று எதிர்பார்க்கிறாள். அப்போது ஒரு சிறுவன் நான்தான் வரைந்தேன் கூறுகிறான்.

இந்த வரைபடம் ஒரு கதை என்று வரை கூறுகிறான். இந்தப் பெண் ஒரு வரைபடத்தையும் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் அதில் ஒரு கிராமமே கண் தெரியாது போன்ற ஒரு புகைப்படத்தை பார்த்து அவள் கேட்க அப்போது முழு கதை தொடங்குகிறது. ஒரு மலையில் இயற்கை சூழலில் வாழ்ந்து வரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோர்ந்த செம்மலர் கணவன் மகள் மகளாக அ‌ஜ்மினா கஸ்ஸிம் உடன் வாழ்ந்து வருகிறார்கள். இவரது மகள் மலை காடுகளில் நூற்றி பறவையாக பறந்து வருகிறார். உயர்ந்த சமூகத்தினரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தன் மகளுக்கு வரக்கூடாது என்று ஒரு தாய் எப்படி பாதுகாக்கிறார் என்பதை சொல்கிறது.

இதில் கழுதையை மேய்த்து வரும் உயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீது காதல் ஒரு தலை காதல் கொள்கிறார். பிறகு காதலை அந்த இளைஞரிடம் வெளிப்படுத்தினாரா இல்லையா? என்ன ஆனது என்பது தான் கதை. ஜாதியால் அடிமைப்பட்டுக் கிடந்ததை வெளிப்படுத்திய திரைப்படம் ஒரு குறும்படம் போல் நகர்த்திச் சென்றாலும் எண்பதுகளில் நடுவர்களை கண்முன்னே காட்டுவது போல கச்சிதமாக பதிவு செய்துள்ளார். அனைவரிடமும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.