ஒரு பெங்காலி பெண்ணிடம் இளையராஜா இப்படி நடந்து கொள்ளலாமா.? ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்…

0
Follow on Google News

சுப்பிரமணியபுரம் படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இவர் இசையில் சுப்ரமணியபுரம் தவிர்த்து வேறு எந்த ஒரு படமும் சொல்லும்படி அமையவில்லை, இந்நிலையில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை அவ்வவ்போது தொகுத்து வழங்கி வரும் ஜேம்ஸ் வசந்தன், இசை அமைப்பாளர் இளையராஜாவை தொடர்ந்து பல நேரங்களில் மிக கடுமையாக விமர்சனம் செய்து வரக்கூடியவர்.

இந்நிலையில் சமீபத்தில் இளையராஜா குறித்து ஜேம்ஸ் வசந்தன் பேசிய பேச்சு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சென்னையில் இளையராஜாவின் இசை கச்சேரியை பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தியது. பல வருடங்களாக நேரடியாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்த இளையராஜாவிடம் பேசி அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இளையராஜா பல வருடங்கள் கழித்து பங்குபெறும் முதல் நேரடி இசை நிகழ்ச்சியும் அதுதான் என தெரிவித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அந்த நிகழ்சியில் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை கொண்டாடி ரசித்ததாக தெரிவித்தவர். அந்த நிகழ்வில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஜானி படத்தில் இடம்பெற்ற காற்று என்னும் கீதம் என்கின்ற பாடலை பாடினார்.

அந்த பாடல் வரியில் காற்றில் என்னும் கீதம் காணாத ஒன்றை தேடுதே என்று பாட வேண்டும், ஆனால் ஸ்ரேயா கோஷல் காணாத ஒன்றை தோடுதே என்று தேடுதேக்கு பதில் தோடுதே என்று மாற்றி பாடிவிட்டார், அங்கே இருந்த ஆடியன்ஸ்களும் பார்த்து சிரிக்கிறார்கள். இளையராஜாவும் அதை பார்த்து சிரித்து தலையில் அடித்துக் கொள்கிறார். மீண்டும் ஸ்ரேயா கோஷல் பாடும்போது தேடுதேக்கு பதில் தோடுதே என்று பாடுகிறார்.

அந்த சமயத்தில் இளையராஜா மைக்கில் ஒரு வார்த்தையை சொல்லி ஸ்ரேயா கோஷலை அவமானப்படுத்தி விட்டார் என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என ஸ்ரேயா கோசலை இளையராஜா விமர்சனம் செய்ததாக தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அப்படி இளையராஜா ஸ்ரேயா கோசலை விமர்சனம் செய்த போது அங்கிருந்த அனைவரும் இளையராஜாவின் ரசிகர்கள் என்ற என்பதால் அதையும் கைதட்டி பாராட்டுகிறார்கள்.

இதெல்லாம் எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை என இளையராஜாவின் செயலுக்கு தன்னுடைய ஆக்ரோசத்தை தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன், ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி பெண், ஹிந்தி பாடலை பாடி கொண்டிருக்கிறார், எதற்காக அவரை அழைத்து வந்தீர்கள், ஏதோ ஒரு அடிப்படையில் தானே அவரை அழைத்து வருகிறீர்கள். அப்படி இருக்கையில் காணாத ஒன்றை தோடுதே என்று பாடினால் அது யாருடைய தவறு.

அவருக்கு பாடல் சொல்லிக் கொடுக்கும் போது, தேடுதே என்பதை நீங்கள் சரி செய்யவில்லை. ஆனால் மேடையில் பாட விட்டு மொழி தெரியாதவர்களை தமிழில் ஜோக் சொல்லி கிண்டல் செய்யலாமா.? அந்தப் பாடகிக்கும் ப புரியும் அளவிற்கு ஆங்கிலத்தில் பேசி, இது தவறாக பாடுகிறார், திருத்திக் கொள்ள வேண்டும் என்று இளையராஜா சொல்லி இருக்க வேண்டும்.

மொழி தெரியாதவர்களை தமிழில் பேசி கிண்டல் செய்யும் அளவிற்கு அநாகரீகமாக நடந்து கொண்டார் இளையராஜா, அந்த வகையில் இளையராஜா கீழே இறங்கி தரம் தாழ்ந்து தான் போனார் என தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன். ஒரு பாடையை சரியாக பாட வைக்க வேண்டிய பொறுப்பு இசையமைப்பாளருக்கு உண்டு. அப்படி சரியாக பாட வைக்காமல் அந்த பாடகியை அவர்களுக்கு தெரியாத மொழிகளில் கிண்டல் செய்வது .? இளையராஜா ஹிந்தியில் போய் ஒரு பாடலை தப்பா பாடிவிட்டால் அங்குள்ளவர்கள், இவருக்கு தெரியாத ஹிந்தியில் பேசி கிண்டல் செய்து சிரித்தால் எப்படி இருக்கும் என ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளது இளையராஜா ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.