சச்சின் மகன் என்றால் பெரிய இதுவா.? சச்சினுக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்டியா… என்ன இது சச்சினுக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சச்சின் மகன் அர்ஜுனுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றே அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப் பிறகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மென்டராக செயல்பட்டு வருகிறார். இவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பல கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதற்கு முந்தைய ஐபிஎல் சீசன்களில் மும்பை அணிக்காக விளையாடி இருக்கிறார். குறிப்பாக கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பல போட்டிகளில் அபாரமாக விளையாடி தனது திறமையை நிரூபித்து இருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டி வந்தனர். அர்ஜுன் டெண்டுல்கரின் பந்துவீச்சு அருமையாக இருந்தாலும், அவரது வேகம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. இதனால் தனது வேகத்தை கூட்டிக் கொண்டு வந்த அர்ஜுன் டெண்டுல்கர் மற்றொரு பக்கம் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வந்தார்.

பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் தன்னை மெருகேற்றி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட மும்பை அணிக்காக விளையாடவில்லை. மும்பை அணியின் தற்போதைய கேப்டனான ஹர்திக் பாண்டியா அர்ஜுனுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கவில்லை. ஹர்திக் பாண்டியா அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்காததன் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, ஹர்திக் பாண்டியா அடிதட்டில் இருந்து எந்த சப்போர்ட்டும் இல்லாமல் கிரிக்கெட்டுக்குள் வந்து ஆல்ரவுண்டராக முன்னேறி இருக்கிறார். அவரைப் போல பல இளைஞர்களும் பல கனவுகளோடு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இப்படியான சூழலில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜுனுக்கு வாய்ப்பு கொடுக்க ஹர்திக் பாண்டியாவுக்கு மனம் வரவில்லை.

இதனாலேயே சச்சின் மகன் அர்ஜுனை பெஞ்சில் அமர வைத்து விட்டு, நமன் தீர், அன்சூல் காம்போச் போன்ற புது வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் அர்ஜுனின் தனிப்பட்ட திறமையை பார்த்தாவது அவருக்கு ஒரு போட்டியில் வேணும் விளையாட வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி குஜராத் அணிக்குய எதிராக போட்டியில் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட் களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட்டையும் வீழ்த்தி மிரள வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே மும்பை அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தன்னுடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை அணியில் வாய்ப்பு தரவில்லை என்பதால் தான் தன்னுடைய லாபியை பயன்படுத்தி மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை மாற்றம் செய்ய பல வேலைகள் செய்தார் சச்சின் என கூறப்படும் நிலையில், தற்பொழுது ஹர்திக் பாண்டியாவும் அதே வேலையை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here