டெல்லி வெற்றிக்கு காரணமாக இருந்த அம்பெயரின் தவறான தீர்ப்பு… ஆதாரத்துடன் வெளியான வீடியோ…

0
Follow on Google News

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மூன்றாவது அம்பெயர் எடுத்த ஒரு தவறான முடிவால் வெற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சாதகமாக திரும்பியது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் அம்பேரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த போட்டியின் போது அம்பெயர் என்ன செய்தார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம். 56வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல் அணி, 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட்களை பறிகொடுத்து 221 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜேக் பிரேசர் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அவருடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் போரலும் 36 பந்துகளில் 65 ரன்கள் விலாசி ஸ்கோரை உயர்த்தினார். இவர்களை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறவே, கடைசியாக களம் இறங்கிய டிரிஸ்டன்ஸ் ஸ்டெப்ஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். அதேபோல் குலாபுதீன் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தமாக 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் டெல்லி அணி எடுத்திருந்தது.

அதன் பிறகு, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பெட்லரை களம் இறக்கியது. பல போட்டிகளில் அபாரமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், நேற்று நடைபெற்ற போட்டியில் நாலு ரண்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். பட்லரும் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ரியான் பராக் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சுபம் துபே அதிரடி ஆட்டம் ஆடி சஞ்சு சம்சனுடன் இணைந்து கூட்டணி அமைத்தார். அரை சதம் அடித்து அசத்தலாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன், விக்கெட்டை பறி கொடுக்காமல் தொடர்ந்து விளையாடி ரன்களை குவித்தார்.

46 பந்துகளில் 86 ரன்கள் குவித்து இருந்த சஞ்சுசாம்சன் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து அவுட் ஆகி வெளியேறினார். ராஜஸ்தான் அணியின் வெற்றி சஞ்சு சாம்சன் கையில் உள்ளது என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. குறிப்பாக அவர் அவுட் ஆன விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது டெல்லி அணியின் சாய் ஹோப், சஞ்சு சாம்சங் அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகில் நின்று கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின் நிலை தடுமாறிய அவர், லேசாக அவரது கால்களை கவுண்டரை கோட்டுக்கு அருகில் வைத்தார். அவரது ஷூவின் முனை பவுண்டரி கோட்டை உரசியது ரீப்ளேவில் காட்டப்பட்டது. ஆனாலும் மூன்றாவது அம்பையர் அவுட் கொடுத்தார்.

இதனால் சஞ்சு சம்ன் அதிர்ந்து போனார்.அம்பயரிடம் ரீப்ளேவை சரி பார்க்குமாறு கூறினார். ஆனால், அம்பயர் உறுதியாக அவுட் என கூறிவிட்டதால் வேறு வழியின்றி வெளியேறினார். நான்காவது விக்கெட்டாக சஞ்சு சாம்சன் வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெடுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. அடுத்து சுபம் துபே 12 பந்துகள் 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின் ஒவ்வொருவராக ஆட்டம் இழக்க அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இப்படியான சூழலில், ராஜஸ்தான் அணி ரசிகர்கள் அம்பையரின் முடிவால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here