கைதாகிறார் ஷங்கர் மருமகன்… மகளை நினைத்து வெட்கி தலைகுனிந்த ஷங்கர்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் மகன் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது, ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர்களது திருமணம் கொரோனா தொற்று காரணமாக முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கு பெரும் வகையில் குறைந்த நபர்களே கலந்து கொண்ட திருமண நிகழ்வாக அமைத்தது.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா தொற்று முடிவடைந்த நிலையில், மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடந்த திட்டமிட்டார் இயக்குனர் ஷங்கர், வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்படும் அழைப்பிதழ் ஓன்று சுமார் 8500 ரூபாய் மதிப்புள்ள அழைப்பிதழ், சினிமா படப்பிடிப்புகளுக்கு மிக பிரமாண்டமாக செட் அமைத்து வருகின்றவர் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், இவரை வைத்து மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஷங்கர்.

இப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீடிரென ரத்து செய்யப்பட்டுள்ளது, இதற்கு காரணம் ஐஸ்வர்யா – ரோஹித் இருவருக்கு ஏற்பட்டு வந்த சண்டை உச்சகட்டத்தை அடைந்தது தான் என கூறப்படுகிறது. மேலும் ரோஹித் மீது உள்ள பாலியல் வழக்கில் எந்த நேரமும் கைது செய்யலாம் என்பதால் தான் ஷங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா – ரோஹித் திருமணத்துக்கு பின்பு, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஷங்கரின்  மருமகன் ரோஹித் மீது போக்ஸோ வழக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. தனியார் பள்ளியில் 11 வகுப்பு படித்து வரும், ரூபா என்கிற பெண் கொடுத்த புகாரில், புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன்.  அங்கிருந்த சீனியர் பிளேயர் தாமரை கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரியின் கேப்டன் ரோகித்தை சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து தெரிவித்த போது,  இது ஒரு பெரிய விஷயம் இல்லை என தெரிவித்துவிட்டார். மேலும், இங்கு விளையாடும் அனைத்து பெண்களும் இப்படியான தொல்லைகளை தாண்டி தான் வருகிறார்கள். நீ அனுசரித்து போ என்று ரோஹித் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். இதன் பின்பு கூட பயிற்சியாளர் தாமரை கண்ணன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

அவர் கூறுவதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு பயிற்சி கொடுக்க மாட்டேன் என்றும் என்னை மிரட்டினார் என 16 வயது சிறுமி கொடுத்த புகாரில் கடந்த அக்டோபர் மாதம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எந்த நேரமும் ரோஹித் கைது செய்யப்படலாம் என்பதால் தான் ஷங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். மேலும் ஷங்கர் தனது மருமகனை நினைத்து வேதனையில் தலைகுனிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஓசில நடித்தால் கூட வேண்டாம்… நயன்தாரா விரட்டியடிப்பு…! பறிபோகும் பட வாய்ப்பு.. ஏன் தெரியுமா.?

error: Content is protected !!