ரஜினிகாந்தை மரியாதை இல்லாமல் பேசிய கவுண்டமணி…! ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் காலங்கள் கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது. நடிகர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற ஆரம்ப கட்ட நகைச்சுவை நடிகர்கள் பெரும்பாலானவர் கவுண்டமணியின் நகைச்சுவையை பின்பற்றி அவரின் சாயல்கள் இவர்களிடம் இருப்பதை பார்க்க முடியும். கவுண்டமணி சினிமாவில் மட்டுமில்லை இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். சாதாரணமாக பேசும் போது கூட அவரின் பேச்சில் நகைசுவை இருக்கும்.

மேலும், யாரையும் கூச்சப்படாமல் முகத்துக்கு நேராக அவர்களுக்கு கவுண்டர் கொடுக்கும் ஆள் தான் கவுண்டமணி. பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் ஒருமுறை பிரம்மன் அவரை படைக்கும் போது, முகத்தை உருவாக்கும் போது மட்டும் பாதியிலே விட்டுவிட்டார் என கிண்டல் செய்துள்ளார், அதே போன்று நகைசுவை நடிகர் பாண்டு துணை நடிகராக இருந்த போது காரில் வந்து இறங்குவதை பார்த்து நேரில் அழைத்த கவுண்டமணி.

யோவ்.. ஜூனியர் ஆர்ட்டிஸ்களில் நீ ஒருத்தன் தான் காரில் வந்து இறங்குகிறாய், என பலர் முன்னணியில் கிண்டல் செய்துள்ளார் கவுண்டமணி, இப்படி நகைசுவை உணர்வுடன் இருக்கும் கவுண்டமணி ஆரம்ப கட்ட சினிமா என்பதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. 16 வயதிலே படத்தில் இயக்குனர் கே.பாக்கியராஜ் சிபாரிசில் பாரதிராஜா நடிப்பதற்கு கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்கும் போது ரஜினி – கவுண்டமணி இடையில் நெருக்கமான நட்பு உருவாகியுள்ளது.

இருவருக்குமே அது சினிமாவின் ஆரம்ப கட்டம் என்பதால் சகஜமாக பழகி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் படப்பிடிப்பு முடிந்த பின்பு நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் அனைவரையும் காரில் அழைத்து சென்று அவர்களின் வீட்டில் விடும்போது முதலில் முக்கிய நடிகர்கள் கடைசியாக துணை நடிகர்கள் என வாகனத்தில் ஏற்றி செல்வார்கள், ஒரு முறை கவுண்டமணி நீண்ட நேரம் காத்திருந்தும் வாகனத்தில் அமர இடம் கிடைக்கவில்லை.

இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார் கவுண்டமணி, அப்போது காரில் 5 பேர்களுடன் வந்த ரஜினி அவரும் கவுண்டமணி உடன் சேர்ந்து நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார், அப்போது காரில் இடம் கிடைக்காதது பற்றி கவுண்டமணி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த், கவலை படாதீங்க அண்ணா, எதிர்காலத்தில் 7 கார் வாங்கி தினமும் ஒரு காரில் வருவீர்கள் என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அதே போன்று மன்னன் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி இருவரும் நடிக்கும் போது ரஜினியை வழக்கம் போல் வாயா … போய.. என்று பேசியுள்ளார் கவுண்டமணி. இதற்கு இயக்குனர் வாசு அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் பேச கூடாது, அவர் இன்று மிக பெரிய சூப்பர் ஸ்டார், அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என வாசு கவுண்டமணியிடம் பேசி கொண்டிருப்பதை கவனித்து கொண்டிருந்த ரஜினி அருகில் வந்துள்ளார்.

அப்போது கவுண்டமணி அண்ணன் எப்போதும் போன்று பேசட்டும், படத்திலும் அண்ணன் அப்படி பேசுவது தான் சரியாக இருக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்ததாக பேட்டி ஒன்றில் கவுண்டமணி தெரிவித்தார், அதே போன்று ரஜினிகாந்த் ஒரு காலத்தில் சொன்னது போன்று 7 கார் வாங்கி தினமும் ஒரு காரில் படப்பிடிப்புக்கு வந்தவர் தான் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ள காதல் விவகாரம்…. அடி தடியில் முடிந்த ஷங்கர் மகளின் திருமண வாழ்க்கை..! என்ன நடந்தது தெரியுமா.?