தப்பு செய்துவிட்டேன்…என் படத்தை யாரும் வாங்க முன் வரவில்லை.. வேதனையில் மணிரத்தினம்..!

1

மணிரத்தினம் இயக்கத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் திரைக்கு வர தயாரக இருக்கும் படம் பொன்னியின் செல்வன், இந்த படத்தில் நடிகர்கள், விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, விக்ரம பிரபு,சரத்குமார், பிரபு,நாசர், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், என ஐஸ்வர்யா ராய் தவிர்த்து மற்ற பெரும்பாலான நடிகர்கள் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். பொன்னியின் செல்வன் பாகுபலி போன்று மிக பிரமாண்ட முறையில் எடுக்கப்பட்டு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

பொன்னியின் செல்வன் படம் மிக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது இருக்கும் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் யாரும் நடிக்காததால், இந்த படத்திற்கான வரவேற்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இல்லாமல் இருந்து வந்தது, இருந்தும் நடிகர் விக்ரம் நடிப்பதால், ஒரு வித எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த படம் பேன் இந்தியா படம் என விளம்பரம் செய்யப்பட்டாலும், பிற மொழி சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டு வருவது கூட தெரியாத நிலையில் தான் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவை, அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து வெளியிட்டார் அந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம், 500 கோடி பட்ஜெட் என்பதால் மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்த்த சினிமா ரசிகர்களுக்கு பாகுபலி போன்று பிரமாண்டம் இல்லை என்கிற ஏமாற்றமே மிஞ்சியது. இருந்து விக்ரம் வருகிற அந்த ஒரு சீன் பாராட்டை பெற்றது.

இருந்தும் டீசர் வெளியிட்டு விழாவில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்றோர் புறக்கணித்தது, படத்திற்கான ப்ரோமோஷன் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பதற்காக தான் நடிகர் விக்ரம் அந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழாவை புறக்கணித்ததாக வெளியான தகவல் பொன்னியின் செல்வன் படத்தின் மீது விக்ரம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் பேன் இந்தியா படம் என்பதால் அணைத்து மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்ட மணிரத்தினத்திற்கு மிக பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை பிற மொழிகளில் யாரும் வாங்க முன் வரவில்லை, இதற்கு காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்களில் பலர், யார் என்றே பிற மொழி ரசிகர்களுக்கு தெரியாதது தான் என்றும், இதனால் பிற மொழிகளில் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்திலும் பெரிதாக இந்த படத்துக்கு வரவேற்பு இல்லாத நிலையில். பொன்னியின் செல்வன் படத்தில் தெலுங்கில் இருந்து ஒரு முன்னணி நடிகர், இந்தியில் இருந்து ஒரு நடிகர், மலையாளத்தில் இருந்து ஒரு நடிகர் என நடித்திருந்தால், இந்திய அளவில் மிக பெரிய வரவேற்பை பெற்று இருக்கும், அதனால் தவறு செய்துவிட்டேன் என தற்பொழுது வேதனையில் மணிரத்தினம் இருப்பதாக கூறப்படுகிறது.

நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா.?

1 COMMENT

Comments are closed.