ரஜினி ஆசைப்பட்டும் வேண்டாம் என நிராகரித்த பாலா… அவருக்காக என்னை மாற்ற முடியாது..!

0
Follow on Google News

பாலு மஹேந்திர உதவி இயக்குனராக இருந்து சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் பாலா, முதல் படமே யார் இந்த பாலா என ஆச்சரியத்தில் தன்னை அண்ணார்ந்து பார்க்க வைத்தவர் பாலா. சேது படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் பாலாவை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது ரஜினிகாந்த் பாராட்டை பெற்ற படம் சேது என பத்திரிகைகளில் அப்போது விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலா ஒரு நடிகருக்காக கதையை உருவாக்குகின்றவர் கிடையாது, கதையை உருவாக்கிவிட்டு தான், அந்த பாத்திரத்துக்கான நடிகரை தேர்வு செய்வார், மேலும் அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் படத்தின் கதையை முழுமையாக சொல்ல மாட்டார், அந்த கேரக்டரை மட்டும் தெரிவித்து அதற்கேற்றார் போல் அந்த நடிகரை தயார் செய்ய சொல்லுவார். குறிப்பாக பாலா படத்தில் நடிக்கும் நடிகர்கள் ஏதும் பேசாமல் அவர் சொல்வதை செய்து விட்டு போக வேண்டும் என விரும்புகிறவர்.

பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தை பார்த்த ரஜினிகாந்த், நேரில் அழைத்து பாலா மற்றும் அந்த படத்தில் நடித்த ஆர்யா, பூஜா ஆகியோரை பாராட்டியவர், மேலும் நான் கடவுள் படத்தில் வரும் அகோரி பாத்திரத்தை வெகுவாக பாராட்டினார். இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் அடுத்து வெளியான அவன் இவன் படத்தையும் பார்த்துவிட்டு நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, எனக்கு ஒரு கதைரெடி பண்ணுக சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என தெரிவித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதே போன்று சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் ஹிந்தியில் வெளியான முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக் தான் இந்த படம், இதை முதல் முதலில் ரீமேக் செய்யும் வாய்ப்பு பாலாவுக்கு தான் கிடைத்தது. இதில் கமல் நடிக்கிறார் நீங்க ரீமேக் பண்ணுங்க என கேட்க, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது, எங்கென்று ஒரு படைப்பு இருக்கிறது என தூக்கி எறிந்துள்ளார் பாலா.

இதன் பின்பு தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தை சரண் இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதே போன்று அவன் இவன் படத்தை பார்த்துவிட்டு அவரே பாலா படத்தில் நடிக்க ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்து கதை தயார் செய்ய சொல்லி பாலாவிடம் நேரடியாக ரஜினி கேட்டுள்ளார். ஆனால் ரஜினிகாந்த் ஏற்றார் போல் படம் எடுக்க முடியாது, நம்முடைய கதைக்கு ரஜினிகாந்த் செட் ஆக மாட்டார் என ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற சிந்தனை கூட பாலாவுக்கு வரவில்லை.

இதனை தொடர்ந்து பாலாவை கதை தயார் சொன்னேன் என்னாச்சு என பாலாவுக்கு தகவல் அனுப்பியுள்ளார் ரஜினி, ஆனால் பாலா ஓப்பனாக, ரஜினிகாந்த் ஏற்றார் போல் என்னால் கதை தயார் செய்ய முடியாது என தன்னை தேடி வந்த மிக பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

இளையராஜா எம்பி தமிழகத்துக்கு கொண்டுவர இருக்கும் உலகே வியக்கும் பிரமாண்டம் திட்டம் என்ன தெரியுமா.?