அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு… ஓவர் வாய்… என்ன பேசினார் தெரியுமா.?

0
Follow on Google News

சுமார் மூன்று வருடம் இடைவெளிக்கு பின்பு திரைக்கு வந்து வலிமை படத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்தளித்த அஜித்குமார். வலிமை படம் அவருடை ரசிகர்களை திருப்பதி படுத்தவில்லை என்பதை புரிந்து கொண்டு, மேலும் தனது ரசிகர்களை மூன்று வருடம் காக்க வைத்து ஏமாற்றி விட்டோம், அதனால், சிறப்பான விருந்து கொடுக்க தயாரான அஜித்குமார், தொடர்ந்து அடுத்தடுத்து அவருடைய புதிய படத்திற்கான அப்டேட்களை வெளியிட்டார்.

வலிமை படத்தை முடித்த கையோடு அதே இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை முடித்த உடன் AK 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் AK 63 படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து அஜித் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷி படுத்தியது.

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம், நீண்ட நாட்களாக அஜித் கால் சீட் கிடைக்க எதிர்பார்த்து இருந்த நிலையில், விக்னேஷ் சிவன் கதையை ஓகே செய்து இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க கால்சீட் கொடுத்துள்ளார் அஜித்குமார்.இதனை தொடர்ந்து அஜித் கால் சீட் கிடைத்த மகிழ்ச்சியில் இந்த படம் குறித்த அடுத்தகட்ட வேலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது தயாரிப்பு நிறுவனம்.

இந்த பேச்சு வார்த்தை காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான போது, அதாவது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகும் முன்பு நடைபெற்றுள்ளது. அப்போது அஜித் நடிக்கும் AK 62 படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார், அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லியுள்ளது, ஆனால் நயன்தாரா சம்பளம் 15 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க உடன் ஷாக்கான தயாரிப்பு நிறுவனம்.

பின்பு அஜித் கால் சீட் கிடைத்ததே பெரிய விஷயம் என்பதால், அஜித் தேர்வு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் என்கிற ஒரே காரணத்திற்காக விக்னேஷ் சிவன் கோரிக்கையை ஏற்று நயன்தாராவுக்கு 15 கோடி சம்பளம் கொடுக்க முன் வந்துள்ளது தயாரிப்பு நிறுவனம். அதனை தொடர்ந்து இயக்குனர் சம்பளமாக தனக்கு 10 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க அதற்கு ஓகே சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்த தகவல் அஜித் கவனத்துக்கு சென்றுள்ளது, அப்போதே தான் கொடுத்த வாய்ப்பை மிஸ் யூஸ் பண்ணுகிறார் விக்னேஷ் சிவன் என்கிற அதிருப்தி அஜித்துக்கு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து, ஹனிமூன் சென்ற புதுமண தம்பதியினர். ஹனிமூன் முடித்து தாய்லாந்தில் இருந்து இந்தியா திரும்பிய இருவரும் சினிமாவில் பிசியாகியுள்ளனர்.

இதில் விக்னேஷ் சிவன் தனது புதிய படமான AK 62 படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் AK 62 படத்தில் நயன்தாராவுக்கு பதில் வேறு ஒரு நடிகையை மாற்ற வேண்டும் என்றும், இந்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதால் அவருடைய ரசிகர்களே படத்தை ப்ரமோஷன் செய்து விடுவார்கள், அதனால் 2 கோடிக்குள் சம்பளம் வாங்கும் நடிகையை தேர்வு செய்யுங்கள் என விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு விக்னேஷ் சிவன் பிடிவாதமாக, அதெல்லாம் முடியாது நயன்தாரா தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கூற, அதற்கு தயாரிப்பு நிறுவனம் பரவாயில்லை இது குறித்து அஜித் சாரிடம் நாங்கள் பேசுகிறோம் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு நடிகை திரிஷாவை அஜித் சிபாரிசு செய்ய வாய்ப்புள்ளது, விக்னேஷ் சிவன் மறுக்கும் பட்சத்தில் அஜித் நடிக்கும் AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு, இந்த படம் ட்ராப் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் லைக்கா நிறுவனத்துக்கு வேறு ஒரு இயக்குனர் கதையை தேர்வு செய்து கால் சீட் கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் நயன்தாரவை வேண்டாம் என முடிவுக்கு வந்ததற்கு, அவருடைய சம்பளம் அதிகம் பிரச்சனையாக இருந்தாலும், அவருக்கு திருமணம் முடிந்துள்ளதால் அவருக்கு தற்பொழுது புதிய பட வாய்ப்புகள் குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீங்க தான் காப்பாத்தணும்.. ராஜமௌலியிடம் கெஞ்சி கூத்தாடும் மணிரத்தினம்… எதற்கு தெரியுமா..?