ஹெச்.வினோத் தலைக்கனம்… அஜித் புதிய படத்தில் இருந்து ஒவ்வொருவராக ஓட்டம்…கண்டு கொள்ளாத அஜித்..

0
Follow on Google News

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் முதன் முதலில் கூட்டணி சேர்ந்த படம் நேர்கொண்ட பார்வை,மிக சிறிய பட்ஜெட்டில் பெரிய ஹிட் கொடுத்த படம் நேர்கொண்ட பார்வை. ஒரு இயக்குனரை அஜித்துக்கு பிடித்துவிட்டால், அந்த இயக்குனருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை கொடுக்க கூடியவர் அஜித், அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து அஜித் மனதில் இடம்பித்தார் ஹெச்.வினோத்.

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து, மீண்டும் வலிமை படத்தில் ஹெச்.வினோத் உடன் கூட்டணி சேர்ந்தார் அஜித்குமார். வலிமை படம் கதை திரைக்கதையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாலும், அந்தப் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. இதனால் அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன்னுக்கு மிகப்பெரிய பாராட்டையும் பெற்று தந்தது. அதேபோன்று நேர்கொண்ட பார்வை படத்திலும் சுப்புராயாவின் ஸ்டாண்டு காட்சிகள் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் வலிமை படம் தொடர்ந்து ஹெச்.வினோத் உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தார் அஜித் குமார். ஆனால் வலிமை படத்தில் திலீப் சுப்புராயன் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றதும், கதை திரைக்கதையில் ஹெச்.வினோத் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஹெச்.வினோத் மனதில் ஈகோ ஏற்பட்டுள்ளது.

தன்னை விட திலீப் சுப்பராயன் பெருமளவில் பேசப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அஜித் நடிக்கும் தற்போதைய புதிய படத்தில் திலீப் சுப்பிராயாவுக்கு பதில் வேறு ஒரு ஸ்டாண்ட் மாஸ்டரை அமர்த்தியுள்ளார். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. வலிமை படத்தில் பாராட்டத்தக்க வகையில் சண்டை காட்சிகளை காட்சிகளை அமைத்துக் கொடுத்த திலீப் சுப்பராயா, அடுத்த அஜித் படத்தில் இடம்பெறாதது அந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்கும் தற்போதைய புதிய படத்தில், ஆர்ட் டைரக்டர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் தலைக்கனமும் ஈகோவின் காரணமாக சிறப்பாக செயல்படுபவர்களை மாற்றிக்கொண்டு வருகிறார். ஹெச்.வினோத் நடவடிக்கை காரணமாக ஒவ்வொருவராக இந்த படத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அஜித் படத்தில் திறமையானவர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவது, அதை அஜித் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அது இந்த படத்திற்கான பின்னடைவை தான் ஏற்படுத்தும். ஆகையால் அஜித் தலையிட்டு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் வலிமையை தொடர்ந்து அடுத்த படமும் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் தொடர்ந்து தலைகனத்துடன் செயல்படுவதால், ஹெச்.வினோத் இந்த படத்துடன் காணாமல் போயிடுவார் என்கின்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது.