மக்கள் மகிழ்ச்சிக்காக மணிரத்தினம் போட்ட கண்டிஷன்… அஜித், விஜய் திருந்துவார்களா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், ரஜினி போன்றவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, முதல் நாள் அதிகாலை ரசிகர் காட்சிகளுக்காக திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கெட் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என்று அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களுக்கு கடும் எதிர்ப்பு குரல் எழுந்தாலும், அந்த படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை.

அதிக விலைக்கு விற்பதால் தங்களுடைய ரசிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, திரையரங்குகள் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக் கூடாது என்று குரல் கொடுக்க எந்த ஒரு நடிகரும் முன் வருவதில்லை. தங்களுக்கு வர வேண்டிய சம்பளம் வந்து சேர்ந்தால் போதும், தன்னுடைய ரசிகர்கள் பாதிப்பு அடைந்தால் நமக்கு என்ன என்கிற முடிவில் உள்ளனர் முன்னனி நடிகர்கள்.

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் அதிக பண செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்த படம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது, இந்த நிலையில் இந்த படத்தை நேரடியாக லைக்கா நிறுவனம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்கிறது. அந்த வகையில் மணிரத்தினம் இந்த படத்தின் டிக்கெட் விற்பனைக்கு கடும் கண்டிஷன் போட்டுள்ளார்.

அதாவது அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள விலையை விட ஒரு பைசா கூட அதிகமாக விற்கக் கூடாது என மணிரத்தினம் கண்டிஷன் போட்டுள்ளார். இதற்கு காரணம், இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் ரசிகர்கள் பார்ப்பதை விட, குடும்பத்துடன் திரையரங்குகளில் தமிழர்கள் வந்து இந்த படத்தை பார்த்தால் தான், இது மிகப்பெரிய வெற்றி அடையும்.

அந்த வகையில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படும் பொழுது, குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். ஆகையால் அரசாங்கம் நிர்ணயம் செய்த விலைக்கு தான் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று மணிரத்தினம் கடும் கண்டிஷன் போட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, ஆன்லைனில் அரசாங்கம் நிர்ணயம் செய்த விலைக்கு பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தன்னுடைய படத்தை திரையரங்குகளில் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும்படி இந்த கண்டிஷன் போட்டுள்ள மணிரத்தினத்தை பின்பற்றி, நடிகர் அஜித்,
விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் அவர்களின் படத்திற்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்கின்றனர் சினிமா துறையினர்.