பாலா – சூர்யா மோதல் உச்சக்கட்டம்.. நான் சொல்றதை அவன் கேட்கட்டும் .. அவன் தேவைக்கு நான் ஆள் கிடையாது..!

0
Follow on Google News

இயக்குனர் பாலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி முத்துமலரை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான சுமார் 3 படங்கள் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம். பாலா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் என்றும், அதனால் தான் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என கூறப்பட்டது. தற்பொழுது மனைவியை விட்டு பிரிந்த பின்பு மிக இயல்பாக பாலா இருக்கிறார்.

இந்நிலையில் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். நந்தா படம் மூலம் தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் பாலா என்பதால், அவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உதவும் வகையில், பாலா இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார் சூர்யா. இந்த படத்தை சூர்யா தனக்கு சொந்தமான 2D நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதில் ஜோதிகாவும் நடிக்க இருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது, சூர்யா மீனவராக இந்த படத்தில் காட்சியளிக்கிறார், இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அடிக்கடி பாலா – சூர்யா இடையே சிறு சிறு மோதல் இருந்து வந்துள்ளது. கதையில் மாற்றம், காட்சியில் மாற்றம் என தொடர்ந்து பாலாவை சுதந்திரமாக படம் எடுக்க விடாமல் மூக்கை நுழைத்து குளறுபடி செய்து கொண்டே வந்துள்ளார் சூர்யா என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பின் போது சில காட்சிகள் 10 டேக், 15 டேக் வரை எடுத்துள்ளார் பாலா, இது சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. படத்தில் சூர்யா விரட்டி போவது போன்ற காட்சி, இதில் சூர்யா ஓடுவது போன்று காட்சி எடுக்கப்பட்டது, 15 டேக் வரை எடுக்கப்பட்ட இந்த கட்சியால், சோர்வு அடைந்த சூர்யா ஒரு கட்டத்தில் பேக் அப் என்று தெரிவித்துவிட்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறி பாலாவிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என சென்னைக்கு ஓடினார்.

பாலா – சூர்யா இடையிலான மோதல் குறித்து செய்திகள் வெளியானதும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது அதனால் தான் சூர்யா சென்னை சென்றார், மே 15ம் தேதி அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து சூர்யா – பாலா இடையில் சமரசம் செய்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோவாவில் மே 15ம் தேதி நடைபெற இருந்த படப்பிடிப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நான் சொல்வதை கேட்டு சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பை தொடங்கலாம், அவன் இஷ்டத்துக்கு என்னால் படம் எடுக்க முடியாது என பாலா பிடிவாதமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இந்த படம் பாதியில் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?

error: Content is protected !!