ஒரே நாளில் இத்தனை கோடியா… வசூலில் விஜயை அடித்து துவம்சம் செய்த ரஜினி….

0
Follow on Google News

ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் நடிக்கும் படங்கள் நன்றாக ஓடினாலும் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. இவரது கம்-பேக்கிற்காக தமிழ் திரையுலகமே காத்துக்கொண்டிருந்தது. இவரது கடைசி படமான அண்ணாத்த, குடும்பங்களை ஈர்த்ததே தவிர, சினிமா ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிதாக பாராட்டப்படவில்லை.

இதையடுத்து இவரை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய படம்தான் ஜெயிலர். இப்படம் குறித்த அறிவிப்பு வந்த பிறகுதான், இவர் விஜய்யை வைத்து இவர் இயக்கியிருந்த பீஸ்ட் படம் வெளியானது. படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று சொதப்பிதால் ரஜினிகாந்திற்கு இவரால் என்ன நிலைமையோ என ரஜினி ரசிகர்கள் பயந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ளஜெயிலர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் அந்த பயம் ரஜினி ரசிகர்களின் கண்களில் இருந்து அகன்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டாருக்கு பெரிய வெற்றியை நீண்ட இடைவெளிக்குப் பின் ஜெயிலர் தந்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் தான் , படம் வெளியாவதற்கு முன்பே, ஜெயிலர் உறுதியாக வெற்றி அடையும் என்கிற நம்பிக்கையில் ரஜினிகாந்த் இமய மலைக்குச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே, ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளின் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் தென்பட்டதன் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் முதல் நாளிலேயே ஜெயிலர் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இந்தியாவில் மட்டும் மொத்தம் 49 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ரூ. 23 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, கேரளாவில் 7 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடி மற்றும் மற்ற மாநிலங்கள் என பல கோடிகளை ஜெய்லர் திரட்டி வருகிறது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஜெயிலரின் வசூல் திருப்திகரமானதாகவே இருக்கிறது.

குறிப்பாக அமெரிக்காவில் 1.45 மில்லியன் அமெரிக்க டாலர்களை படம் வசூலித்திருக்கிறதாம். இந்திய ரூபாய் மதிப்பின்படி 12 கோடி ரூபாய் ஆகும். முன்னதாக அமெரிக்காவில் பீஸ்ட் திரைப்படம் 1.37 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்திருந்தது. ஜெயிலர் தற்போது அந்த ரெக்கார்டை உடைத்திருக்கிறது. பீஸ்ட்டின் ரெக்கார்டை முறியடித்ததன் மூலம் ரஜினிகாந்த் நான்தான் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பொன்னியின் செல்வன் 2வுக்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படமாக ஜெயிலர் தற்போது இருக்கிறது. வார இறுதி என்பதால் இன்று, நாளை, நாளை மறுநாளில் மேற்கொண்டு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நடப்பாண்டில் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தமிழ்படம், கர்நாடகாவில் தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிலான ஓபனிங், கேரளாவில் நடப்பாண்டில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம்,

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடப்பாண்டில் பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் சினிமா என்ற பல்வேறு பெருமைகளை ஜெய்லர் படம் பெற்று வருகிறது. மேலும் படத்தின் கலக்சன் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதியில் 100 கோடி வசூல் செய்யும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.