ரிலிஸ் தள்ளிப்போன ப்ளு சட்ட மாறனின் ஆண்டி இந்தியன் திரைப்படம்!

0

பிரபல யுடியூப் விமர்சகரான மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. யுடியுபில் தமிழ் சினிமாக்களை கண்டபடி கழுவி ஊற்றி விமர்சனம் செய்து பிரபலம் ஆனவர் மாறன். மாறன் என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது. ப்ளு சட்ட மாறன் என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் அவர் தானே ஒரு படத்தை எடுக்கிறேன் என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்டார்.

படத்தைத் தொடங்கி முடித்த அவர் சென்ஸாருக்கு சென்றபோதுதான் பிரச்சனைகளை சந்தித்தார். படத்தில் 38 இடங்களில் வெட்டு சொன்ன சென்சார் அதிகாரிகள் அதற்கு படக்குழு சம்மதிக்காததால் சென்சார் சான்றிதழ் தர மறுத்தனர். இதையடுத்து நீதிமன்றம் சென்று படக்குழுவினர் சான்றிதழ் பெற்றனர். இதையடுத்து டிசம்பர் 3 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினர்.

ஆனால் இப்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் ஒரு வாரம் தள்ளி டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால் திரைகள் கிடைப்பதிலும் சிக்கல் எழலாம் என சொல்லப்படுகிறது.