பெரும் சிக்கலில் இருந்த அஜித்… கடவுள் போல் உதவி செய்த விஜயகாந்த்… அந்த நன்றி கூடவா அஜித்துக்கு இல்லை..

0
Follow on Google News

வாழும் வள்ளலாக வாழ்ந்த விஜயகாந்த் மரணம் அடைந்து நாட்கள் கடந்தாலும் இன்னும் அவருடைய நினைவிடத்திற்கு மக்கள் அலைகடல் என வந்து கண்ணீர் சிந்தி விட்டு செல்கிறார்கள். அதில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் விஜயகாந்த் சமாதியில் இலை போட்டு சாப்பிட்ட சம்பவம் பலரை திடுக்கிட செய்தது. எதற்காக இங்கே இலையை போட்டு சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு.?

ஒரு காலத்தில் நான் சாப்பாடுக்கு கஷ்டப்பட்டபோது விஜயகாந்த் போட்ட சோற்றில் பசியாறினேன். அந்த நினைவாகத்தான் இங்கு அமர்ந்து இலை போட்டு சாப்பிடுகிறேன் என்று அவர் சொன்ன போது அவர் மட்டும் கண் கலங்கவில்லை அதை பார்த்த அனைவரும் கண்கலங்கினார்கள். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது ஒரு முறை சங்கத்திற்குள் வருகிறார், நடிகர் சங்க வளாகத்தில் பெருந்திரளாக துணை நடிகர்கள் கையில் நடிகர் சங்க உறுப்பினர் அட்டையுடன் அங்கே நிற்கிறார்கள்.

அதில் பெரும்பாலும் வயதானவர்களும் இருக்கிறார்கள், அவர்களைப் பார்த்து விஜயகாந்த் என்ன இங்க நிற்கிறீர்கள் என கேட்க, அதற்கு அவர்கள் எங்களுக்கு வேலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், கேட்டால் வயதாகிவிட்டது என்கிறார்கள், மேலும் ஒரே முகத்தை திரும்பத் திரும்ப எங்களால் காட்ட முடியாது, அதனால் புதிய புதிய ஆட்களை வைத்து நாங்கள் படம் எடுத்துக் கொள்கிறோம் என்று தொடர்ந்து எங்களை புறக்கணித்து வருவதால் எங்களுக்கு சாப்பாடுக்கு கூட வழியில்லை என்று கண்கலங்கி விஜயகாந்த்திடம் முறையிடுகிறார்.

உடனே செயல்குழு பொதுக்குழுவை விஜயகாந்த் கூட்டி நடிகர் சங்க உறுப்பினர் அட்டை உள்ள துணை நடிகர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை தர வேண்டும், இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்து மேலும் ஆட்கள் பத்தவில்லை என்றால் தான் வெளியில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட விஜயகாந்த், ஒரு குழு ஒன்றை அமைக்கிறார்.

அந்தக் குழு ஒவ்வொரு படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பிக்கிறார், அதன்படி திடீரென்று படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு செல்லும் அந்த குழு, அங்கு இருக்கும் அனைத்து துணை நடிகர்களிடம் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருக்கிறதா என்று பரிசோதிக்கும், அப்படி நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத வெளியே இருந்து ஆட்களை வேலைக்கு வைத்தால் அந்த ஷூட்டிங் நிறுத்தப்படும், அல்லது அபராதம் விதிக்க விதிக்கப்படும் சூழல் உருவாகி இருந்தது.

அந்த வகையில் இன்றும் பல துணை நடிகர்கள் எங்கள் குடும்பத்தில் ஒளியாற்றியவர் விஜயகாந்த் என்று கண்ணீர் மல்க பேசி வருவதை பார்க்க முடிகிறது. இப்படி சினிமா துறையை சார்ந்தவர்களுக்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கும் பல உதவிகள் செய்து வந்த விஜயகாந்த் பல்வேறு காலகட்டங்களில் ஒரு சிக்கலான சூழலை அஜித் சந்தித்தபோது அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்துள்ளார் என்று சினிமா துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

னால் தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் அஜித் மதிப்பது கிடையாது, இக்கட்டான சூழ்நிலையில் சில பிரச்சினைகளை தனக்கு தீர்த்து வைத்த விஜயகாந்த் செய்த உதவியை கொஞ்சம் அஜித் நினைத்து பார்த்திருந்தால் விஜயகாந்த் மரணம் அடைந்த உடனேயே துபாயிலிருந்து பறந்து வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருப்பார் அஜித்.

இந்நிலையில் அஜித் சென்னை வந்து நாட்கள் கடந்து கொண்டிருக்கிறது இன்னும் விஜயகாந்த் நினைவிடம் செல்ல அவருக்கு மனம் வரவில்லை, அந்த வகையில் நடிகர் சங்கம் சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் விஜயகாந்த் இரங்கல் கூட்டத்திலும் அஜித் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, மேலும் அஜித்துக்கு கொஞ்சமாவது நன்றி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் இதுபோன்று செய்ய மாட்டார் என்கின்ற விமர்சனமும் மிக கடுமையாக அஜித்தை நோக்கி எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.