நயன்தாரா வாங்கிய சம்பளம் மட்டும் 10 கோடி… ஆனால் மொத்த வசூல் வெறும் 85 லட்சம் தான்..

0
Follow on Google News

சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருகிறது, இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான அன்னபூரணி படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்தது, அதாவது ஒரு பெண் சாதனை படைக்க வேண்டும் என்றால் அந்தப் பெண் சாதி மதம் என அனைத்தையும் கடந்து தான் வரவேண்டும் என்பதை சொல்லும் விதமாக அந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

ஆனால் அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, அதாவது இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் பெரும்பாலும் கடவுளாக வணங்கப்படும் ஸ்ரீ ராமரை இழிவு படுத்தும் விதத்தில், ஸ்ரீ ராமரே அசைவம் சாப்பிடக்கூடியவர் தான் என்று நயன்தாரா அன்னபூரணி படத்தில் பேசிய வசனம், அதுவும் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த படம் வெளியாகி அதில் இடம்பெற்ற ஸ்ரீ ராமர் குறித்து நயன்தாரா பேசிய வசனம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனங்கள் இந்த படத்தில் இடம்பெறுவதால், அந்த படத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் அல்லது இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும், அதை வைத்து இந்த படத்ம் வெற்றி அடைந்து விடும் என்கின்ற ஒரு நோக்கில் கூட அந்த படத்தில் இயக்குனர் ஸ்ரீ ராமர் குறித்து சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை இடம் பெற செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் மொத்த படத்திற்கு ஆப்பு அடிக்கும் விதத்தில் தலைகீழாக மாறியது இந்த சர்ச்சை கூறிய வசனம். அதாவது நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியை அடைந்து விட்டது. இந்த படத்தை தமிழ்நாட்டில் யாரும் சீண்ட கூட இல்லை என்றே சொல்லலாம், இந்நிலையில் ஓடிடியில் இந்த படம் வெளியிடப்பட்டது, இதில் ராமர் குறித்து நயன்தாரா பேசிய சர்ச்சை கூறிய வசனம் தமிழக பிஜேபி மற்றும் தமிழகத்தில் உள்ள இந்துதுவா அமைப்பினர் தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை.

ஆனால் மும்பையில் சில இந்துத்துவா அமைப்பினர் அந்த அன்னபூரணி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை என ஓட்டு மொத்தத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர், இதனால் நயன்தாரா மற்றும் அந்த படத்தில் இயக்குனர் உட்பட பலரும் மும்பை நீதிமன்றம் செல்லும் நிலை உருவானது, இந்த நிலையில் இந்த விவகாரத்தை வளரவிட்டால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விடுவோம்.

காரணம் தமிழக அளவில் மட்டும் தான் எதிர்ப்பு வரும், இந்த விளம்பரத்தை வைத்து இந்த படத்தை வெற்றி அடையச் செய்து விடலாம் என்று எதிர்பார்த்த படத்தின் இயக்குனர். தமிழகத்தில் யாரும் சீண்டவில்லை, ஆனால் அதற்கு எதிர்மறாக இந்திய அளவில் இதற்கு எதிர்ப்பு வருது மிகப் பெரிய பின்விளவை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க ஓடிடி தளத்தில் தற்போது ஒளிபரப்பான அன்னபூரணி படத்தை தற்காலியாக நிறுத்துவதாகவும், மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற சர்ச்சை கூறிய வசனம் நீக்கப்படுவதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தில் நயன்தாராவின் சம்பளம் மட்டுமே 10 கோடி, அந்த வகையில் திரை அரங்கில் வெளியாகி படுதோல்வி அடைந்த அன்னபூரணி திரைப்படம் இதுவரை வெறும் 85 லட்சம் தான் வசூல் ஆகி உள்ளது. இந்த நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த சம்பளமாவது நம் கைக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஓடிடியில் இந்த படம் வெளியிட்ட தயாரிப்பாளருக்கு பலத்த அடியாக தற்பொழுது அந்த சர்ச்சை குறை வசனத்தால் ஓடிட்டியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சீண்டுவது போன்று வசனம் அமைத்தால், சம்பந்த பட்ட அமைப்பினர் எதிர்ப்பின் மூலம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விடும் என்கின்ற ஃபார்முலா தற்போது அவர்களுக்கே ஆப்பாக அமைந்து, ஸ்ரீ ராமரை சீண்டி நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தின் தயாரிப்பாளரை நடுரோட்டில் நிற்க வைத்ததும் இல்லாமல், தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நயன்தாரா, தற்பொழுது அன்னபூரணி படத்தின் வசூல் 85 லட்சம் கூட தேறாத நிலையில் இனி நயன்தாராவை வைத்து யாரும் படம் எடுக்கவும் மாட்டார்கள், அந்த வகையில் இத்துடன் நயன்தாராவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்கின்றது சினிமா வட்டாரங்கள்.