AR ரகுமானுக்கு மனைவி கொடுத்த எச்சரிக்கை… வெளியே வராமல் தனியாக இருக்கும் AR ரகுமான்…

0
Follow on Google News

எல்லா வகையிலையும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் பணியாற்றவும் முடியும், அப்படி இல்லை என்றால் அவர் கிட்டயே சேர்த்துக் கொள்ள மாட்டார் என்பது ஏ ஆர் ரகுமான் பற்றி சினிமா துறையில் இருப்பவர்கள் அறிந்தது. என்னதான் பேர் புகழ் பணம் என ஏ ஆர் ரகுமானுக்கு இருந்தாலும் கூட, அவருடைய வாழ்க்கை என்பது மிக எளிமையான வாழ்க்கை தான்.

குறிப்பாக யாரிடமும் தகுதி பார்க்க மாட்டார். அதனால் தான் தன்னுடைய இசைக்குழுவில் சவுண்ட் இன்ஜினியர் ஆக இருந்தவரை தன் மகள் காதலித்த உடன் அதற்கு தடையாக இல்லாமல், குறிப்பாக தகுதி பார்க்காமல் மகிழ்ச்சியுடன் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார் ஏ ஆர் ரகுமான். அவர் உடன் வேலை பார்க்கின்றவர்களுக்கு நேரம் போவதே தெரியாத அளவிற்கு வேலையும் இருக்கும்.

அவருடைய ஸ்டூடியோ உள்ளே சூரிய வெளிச்சம் படாத படி இருக்கும் அதனால் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறார்கள் என்று கூட ரகுமானுடன் வேலை பார்ப்பவர்களுக்கு தெரியாது, ஒரு சில நேரங்களில் ஒன்றறை நாட்கள் தொடர்ந்து வேலை பார்த்து அனுபவம் அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு உண்டு. அப்படி வேலையில் மூழ்கி பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏ ஆர் ரகுமானே டீ போட்டு வந்தலாம் கொடுப்பாராம்.

அந்த அளவிற்கு சகஜமாக கோபப்படாமல் தன்னிடம் பணியாற்றுபவர்களிடமிருந்து வேலை வாங்கக் கூடியவர் ஏ ஆர் ரகுமான். அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா மிகவும் ஜாலியான நபர் என்றும், அவர் ஸ்டுடியோவிற்கு வந்தால் மற்ற பணியாளர்களிடம் எப்படி ஏ ஆர் ரகுமான் நடந்து கொள்வாரோ அதேபோன்றுதான் மனைவி சாய்ரா பானுவிடம் நடந்து கொள்வார் ரகுமான்.

மேலும் சாய்ரா பானு ஸ்டுடியோவில் பணியாற்றுபவர்களுடன் இணைந்து பணியாற்றும் பொழுது தான் ஏ ஆர் ரகுமானின் மனைவி என்கின்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் அங்கே பணியாற்றுகின்றவர்களிடம் சகஜமாக பழகக் கூடியவர் சாய்ரா பானு என்கின்றனர் ஸ்டுடியோவில் பணியாற்றியவர்கள். மேலும் சாய்ரா கோபத்தின் காரணமாகத்தான் இந்த விவாகரத்து முடிவை எடுத்ததாகவும்.

இதை ஏ ஆர் ரகுமான எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. காரணம் அடிக்கடி ஏ ஆர் ரஹ்மானுக்கும் அவருடைய மனைவிக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வந்திருக்கிறது. காரணம் கணவன் தன்னை கண்டு கொள்ளவில்லை தன்னிடம் நேரம் செலவிடவில்லை என்பதுதான், இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் விவாகரத்துச் செய்து விடுவேன் என்று பலமுறை ஏ ஆர் ரகுமானை மனைவி சாய்ரா மிரட்டி இருக்கிறார்.

அதேபோன்று இம்முறையும் சாய்ரா பானு நான் விவகாரத்தைச் செய்யப் போகிறேன் என்று தெரிவிக்க , அதற்கு ஏ ஆர் ரகுமான் வழக்கம்போல் சொல்லுகிற விஷயம் தானே என்று ஜாலியாக கடந்து சென்று விட்டாராம். ஆனால் உண்மையிலேயே அவருடைய மனைவி சாய்ரா கணவரை விட்டு பிரிவதாக அறிவித்தது ரகுமானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.

இருந்தாலும் தன்னை விட்டு பிரிய முடிவு செய்த மனைவிக்கு தனியாக வீடு என மற்ற அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வதற்காக வேலைகளிலும் இறங்கி உள்ள ரகுமான் மனைவியை விட்டு பிரிந்த பின்பு யாரையும் சந்திக்காமல் யாருடனும் பேசாமல் தனி அறையில் அமைதியாக இருந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.