கணவருக்காக களத்தில் இறங்கிய மகாலட்சுமிக்கு நடந்த கொடுமையை பார்த்திங்களா.?

0
Follow on Google News

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சில படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். முன்னாள் சன் மியூசிக் விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமி கடந்த ஆண்டு ரவீந்தர் சந்திரசேகரனை காதலித்து திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

3 மாதங்கள் கூட தாண்டாது, விவாகரத்து பண்ணிட்டு பிரிஞ்சிடுவோம் என்றெல்லாம் தொடர்ந்து யூடியூப் சேனல்களில் எங்களைப் பற்றி பேசி வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓராண்டு திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து விட்டோம் என சமீபத்தில் தான் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரவீந்தர் சந்திரசேகரன் பெரிய போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார்.

இந்நிலையில் மோசடி வழக்கில் சிக்கி ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார் ரவீந்தர். இந்த நிலையில் தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரவீந்தர் சந்திரசேகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தகவல் தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சென்னையை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா. இவர் தான் ரவீந்தர் சந்திரசேகரின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில் அவர், ரவீந்தர் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்கி இருப்பதாக கூறி என்னிடம் இருந்து 16 கோடி ரூபாய் மோசம் செய்து இருக்கிறார்.
பணத்தை திருப்பி கேட்டால் தரவில்லை. இதனால் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்திருந்தது.

பின் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைத்திருக்கிறார்கள். இது குறித்து பலருமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகரின் ஜாமின் மனு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சின்னத்திரை நடிகையும் தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவியுமான மகாலட்சுமி தன் கணவருக்கு ஜாமீன் வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ரவீந்தர் சார்பாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்று அவருக்கு ஜாமீன் கேட்டு, மற்றொன்று சிறையில் முதல் வகுப்பு அறை (விஐபிக்களுக்கு கொடுக்கப்படும் ஏ கிளாஸ்) வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில், தற்போது எழும்பூர் நீதிமன்ற மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ரேவதி, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இந்த வழக்கில் அவரை விடுவித்தால் சாட்சிகளை அவர் அழிக்கக்கூடும் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வாதங்களை முன்வைத்ததன் அடிப்படையில் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி கணவரை ஜாமினில் கூட மீட்க முடியவில்லை என்கிற வேதனையில் வாடி வருவதாக கூறுகின்றனர்.

மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரன் வசமாக சிக்கியிருப்பதால் தான் அவருக்கு நீதிபதிகள் ஜாமின் வழங்கவில்லை என்றும் இத்தனை கோடி ரூபாயை ஏமாற்றித் தான் தயாரிப்பாளர் போர்வையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாரா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் விளாசி வருகின்றனர்.