தோனி சிஎஸ்கேவுக்கு தேவையில்லாத ஆணி… வெளுத்து வாங்கிய ஹர்பஜன் சிங்..

0
Follow on Google News

பஞ்சாப் அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்களே எடுத்திருந்த நிலையில், பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். 168 ரன்க எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்யா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களத்தில் இறங்கினர். ரஹானே 9 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் பவுலிங்கில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த டேரில் மிட்செல், ருதுராஜ் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

மிட்செல் 30 ரன்களும், ருதுராஜ் 32 ரன்களும் எடுத்து வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மொயின் அலி 17 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 43 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்களும், ஷர்துல் தாகூர் 17 ரன்களும் எடுத்தனர். ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் களம் இறங்கிய தோனி, ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். ஜானி பேர்ஸ்டோ 7, ரிலீ ரூசே 0, சாம் கரன் 7, ஜிதேஷ் சர்மா 0, அசுதோஷ் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும், ஷஷாங்க் சிங் 27 ரன்களும் சேர்க்க, கடைசி ஓவர்களில் ராகுல் சாஹர், 16 ரன்னும், ஹர்ப்ரீத் பிரார் 17 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்தார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் பந்துவீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்தனர்.

அந்த நேரத்தில் நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் தோனி பேட்டிங் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் செய்தார். குறிப்பாக 42 வயதை கடந்து விட்டதால் முழங்கால் வலியை கொண்டுள்ள அவர் கடந்த வருடத்திலிருந்து கடைசி சில ஓவர்களில் ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் 9வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் தோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது. “ஒருவேளை 9வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் தோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். இப்போதும் முடிவை எடுக்கக்கூடிய அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வராமல் தன்னுடைய அணியை தலை குனிய வைத்தார். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் தோனியை போல் ஷாட்டுகளை படித்ததில்லை. எனவே தோனியின் ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

“அவருடைய அனுமதியின்றி சிஎஸ்கே அணியில் எதுவும் நடக்காது. எனவே தோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்ட போது கடந்த போட்டிகளில் அசத்திய தோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று சிஎஸ்கே வென்றாலும் நான் தோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here