ஏம்மா திரிஷா… உனக்காக குரல் கொடுத்த சேரனுக்கு நீ செய்கிற மரியாதை இது தானா.?

0
Follow on Google News

நடிகை திரிஷா குறித்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் அருவருக்க தக்க வகையில் பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக எம் எல் ஏ க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவந்தூர் ரிசார்ட்டில், அதிமுக முக்கிய புள்ளி ஒருவர், எனக்கு திரிஷா தான் வேண்டும் என அடம் பிடித்ததாகவும், அதனால், திரிஷாவுக்கு 25 லட்சம் பணம் கொடுத்து கருணாஸ் மூலம் கூவந்தூர் அழைத்து வரப்பட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த செய்தி வைரலாக பரவி, நடிகை திரிஷா இமேஜ் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆனது. மேலும் நடிகை திரிஷா இது குறித்து உடனே வாய் திறக்காமல், எந்த ஒரு பதிலும் தராமல் அமைதியாக இருக்க, சக நடிகையை இப்படி ஒருவர் படு கேவலமாக பேசி வருவது குறித்து சினிமா துறையை சேர்ந்த யாரும் கண்டு கொள்ளாமல், நமக்கென்ன என அமைதியாக இருந்தனர், இதனால் அதிமுக முன்னாள் நிர்வாகி திரிஷா குறித்து பேசியது உண்மையாக இருக்குமோ, அதனால் தான் சம்பந்த பட்ட திரிஷாவே அமைதையாக இருக்கிறார் என்றல்லாம் விமர்சனம் எழுந்து வந்தது.

இந்நிலையில் சினிமா துறையில் இருந்து திரிஷாவுக்கு ஆதரவாக முதல் ஆளாக களத்தில் இறங்கி குரல் கொடுத்தார் இயக்குனர் சேரன். எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் திரைத் துறையினர் பற்றி பெயரைக் குறிப்பிட்டு அவதூறாக பேசிய அவர் மீது சட்டமும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சேரன், நடிகர் சங்கம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என திரிஷாவுக்கு ஆதரவாக சேரன் குரல் கொடுத்த பின்பே, அவரை தொடர்ந்து நடிகை கஸ்தூரி, நடிகர் மன்சூர் அலிகான் போன்றோர் திரிஷாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்கள்.

ஏன் திரிஷாவை இந்த விவகாரத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், சேரன் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பின்பு, திர்ஷாவுக்கு சினிமா துறையினர் ஆதரவு அதிகரிக்க தொடங்கிய பின்பே திரிஷா இந்த விவகாரம் குறித்து வாய் திறந்தவர் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. இதற்கு கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்பேன்” என தன்னை பற்றி படு கேவலமாக பேசிய நபருக்கு எதிராக ஒன்றரை நாட்கள் கழித்து அவருடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

சேரன் திர்ஷாவுக்கு ஆதரவாக கொளுத்தி போட்ட நெருப்பு பத்தி எரிய, இதை சற்றும் எதிர்பார்க்காத திரிஷாவை இழிவாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு, நான் திரிஷா பற்றி தவறாக பேசவில்லை, அதாவது திரிஷா மாதிரி சின்ன பொண்ணு தான் வேண்டும் என்று அதிமுக முக்கிய புள்ளி அடம் பிடித்தார், ஆனால் வேறு மாதிரியாக பிரித்து சொல்லப்பட்டிருக்கிறது என அந்தர் பல்டி அடித்து பின் வாங்கினார் அந்த அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜு.

இந்நிலையில் சேரன் த்ரிஷாவுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தெரிவித்தது மட்டுமின்றி, இது குறித்து சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள வலியுறுத்தி நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் சேரன் போன் செய்தாராம். ஆனால் இருவருமே போனை எடுக்கவில்லையாம். அதுமட்டுமின்றி சினிமாவில் மூத்த இயக்குனர் சேரன் போன் செய்திருக்கிறாரே என்று திருப்பி கூப்பிடுவோம் என்று கூட அவர்கள் திரும்பி போன் செய்யவில்லையாம். இது சேரனுக்கு மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது.

நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், யாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரோ அவரே இதுவரை சேரனுக்கு நன்றி தெரிவிக்கவில்லையாம். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேரனை சிறிதும் மதிக்காமல் ஒரு நன்றி கூட தெரிவிக்காமல் நன்றி இல்லாமல் திரிஷா நடந்து கொண்டுள்ளது திரிஷாவுக்கு எதிராக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்க்கது.