இனி இங்கே வண்டி ஓட்ட முடியாது.. சூர்யாவை பின்னாலே அடுத்தடுத்து மும்பைக்கு செல்லும் சிவகுமார் குடும்பம்…

0
Follow on Google News

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, நீண்ட கால இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக ஓரிரு படங்களில் நடித்து வந்தவர் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்த ‘காதல் தி க்கோர்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி முழுவீச்சில் சினிமாவில் இறங்க முடிவு செய்த ஜோதிகா ஜிம்மிற்கு சென்று கடுமையான உடல் பயிற்சி செய்து வருகிறார்.

மும்பையில் குடியேறியுள்ள ஜோதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில், தன்னுடைய அப்பா அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்காகவே மும்பையில் குடித்தனம் போயிருப்பதாகவும், மேலும் குழந்தைகளின் படிப்புக்காக குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுவிட்டதாகவும்” ஜோதிகா சொல்லியிருந்தார்.

ஆனால் அதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்றும், சூர்யா குடும்பத்தோடு மும்பைக்கு சென்றதற்கு பின்னணியில் மிகப்பெரிய திட்டம் இருப்பது தற்பொழுது சூர்யா – ஜோதிகா நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது என்கிறது சினிமா வட்டாரங்கள். தற்பொழுது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் உடன் இணைந்து சைத்தான் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல், சூர்யா ஹிந்தி படத்தில் கர்ணன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யா ஜோதிகாவை தொடர்ந்து சிவகுமார் குடும்ப உறவினரும், சிவகுமார் குடும்ப பினாமி என்று பேசப்படும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் பெட்டியை தூக்கி கொண்டு மும்பைக்கு பறந்திருக்கிறார். சிவகுமார் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் ஆபீசை மும்பையில் திறந்திருக்கிறார். இதற்கு சிவகுமார் நேரில் சென்று வாழ்ந்து தெரிவித்துள்ளார்.

இனி ஞானவேல் ராஜா பாலிவுட் படங்களை தயாரிக்க, அதில் சூர்யா ஜோதிகா நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா ஜோதிகாவை தொடர்ந்து கார்த்தியும் விரைவில் பாலிவுட்டுக்கு வந்துவிடுவார் என்றும், எனவே இனி ஒட்டுமொத்த சிவகுமார் குடும்பமும் மும்பையில் செட்டில் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு சிவக்குமார் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆவதற்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது, அண்மையில் பருத்திவீரன் படத்தின் சர்ச்சை பூதாகரமாக வெடித்திருந்தது. இதில் ஞானவேல் ராஜா பின்னால் இருந்து சிவக்குமார் குடும்பம் செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில், அமீருக்கு ஆதாரவாக பெரும்பாலான சினிமா துறையினர் வரிசை கட்டி ஆதரவை தெரிவித்து சிவகுமார் குடும்ப உறவினரான ஞானவேல் ராஜாவை வெளுத்து வாங்கினார்கள்.

இதனால் சினிமா துறையினர் மத்தியில் சிவகுமார் குடும்பம் மிக பெரிய அளவில் டேமேஜ் ஆனது. இந்த பிரச்சினையை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அப்போது சூர்யா கார்த்தி என இருவருமே ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி கேப்டனின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு கேப்டனின் சமாதிக்கு வந்து அண்ணன் தம்பி இருவரும் கண்ணீர் வடித்து பாசாங்கு செய்திருந்தனர் இது சிவகுமார் குடும்பத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் தமிழில் சூர்யா கமிட்டாகி இருந்த வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா வெளியேற்ற படுவதாக கூட ஒரு பக்கம் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது, அந்த வகையில் சிவகுமார் குடும்பத்தினரின் முகத்திரை நாளுக்கு நாள் கிக்கப்பட்டு வருவதால், இதுக்கு மேல் தமிழ் சினிமாவில் நமக்கு மரியாதை இல்லை, இனி தமிழ் சினிமாவில் நம் பிழைப்பை நடத்த முடியாது என உணர்ந்த சிவகுமார் குடும்பம், பாலிவுட் பக்கம் படம் பண்ணுவோம் என்று குடும்பத்துடன் மும்பைக்கு ஒவ்வொருவராக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.