அஸ்வின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது… இனியும் ஏமாற்ற முடியாது… சேவக் பகிரங்க தகவல்…

0
Follow on Google News

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்தும் அவரது பௌலிங் குறித்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். சமீபத்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தொடரில் 500 விக்கெட்டுகளை குவித்து சாதனை படைத்திருந்த அஸ்வின், சில வருடங்களாகவே டி20 கிரிக்கெட்டில் பெரிதாக விக்கெட்களை எடுப்பதில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ” டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்டுகளை எடுப்பது முக்கியமானது கிடையாது” அஸ்வின் என்று கூறியிருந்தார். மேலும் தற்போதைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடிய அஸ்வின் ரெண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.ஆனால் அதே அணியில் ஸ்பின் பௌலராக களம் இறங்கிய சாஹல் ஒன்பது போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து விரேந்திர சேவாக் வெளிப்படையாக தனது கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது, பல்வேறு போட்டிகளில் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் ஆகவும் , சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வழக்கமான ஆப் ஸ்பின் பந்தை வீசுவதில்லை என்றும், அவரது ஓவரில் 9 ரன்களுக்கு குறைவில்லாமல் விட்டுக் கொடுத்து விடுகிறார் என்றும் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

அதே சமயம், சாஹல், குல்தீப், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சுழற் பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று கூறிய சேவாக், இப்படியே அஸ்வின் விளையாடினால் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவரை யாரும் வாங்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இது குறித்து சேவாக் பேசுகையில், “கே எல் ராகுல் பேட்டிங்க்கு ஸ்ட்ரைக் ரேட் முக்கியமில்லை என்று கூறியது போல, அஸ்வின் டி20 கிரிக்கெட் தொடரில் விக்கெட் எடுப்பது முக்கியமில்லை என்று கூறி இருக்கிறார்.

சாமிபுத்திய புள்ளி விபரங்களின்படி, அவரது விக்கெட் கைப்பற்றும் விகிதம் குறைவாக இருக்கிறது. ஒரு பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் 25 30 ரன்களை கொடுப்பார் என்று எதிர்பார்ப்பார்களா, அல்லது நான்கைந்து விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்ப்பார்களா? இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வின் மோசமாக விளையாடி வரும் நிலையில், அவருடைய போட்டியாளர்களான குல்தீப், சாகல், ஜடேஜா உள்ளிட்ட பவுலர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை கைப்பற்றி வருகின்றனர்.

ஆனால் அஸ்வின் ஆஃப் ஸ்பின் பவுலிங் போட்டால் ரன் எடுத்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் கேரம் பால் போட்டு வருகிறார். அஸ்வின் முதலில் தனது மனநிலையை மாற்றிக் கொண்டு, ஆஃப் ஸ்பின் பால் போட வேண்டும். அப்படி போட்டால் நிச்சயமாக விக்கெட்டுகளை எடுக்கலாம். மாறாக அவர் இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால், அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் விற்கப்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சேவாக் போன்று பல சீனியர் கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் மீது இதே போன்ற விமர்சனத்தை வைத்து வருகிறார்கள், அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத சூழல் உருவாகி , அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது.