Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
குழந்தையுடன் சிக்கிய ரோகிணி… நடுதெருவுக்கு வந்த மனோஜ்… சிறகடிக்க ஆசையில் அடுத்து என்ன.? - Dinaseval News

குழந்தையுடன் சிக்கிய ரோகிணி… நடுதெருவுக்கு வந்த மனோஜ்… சிறகடிக்க ஆசையில் அடுத்து என்ன.?

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ரோகிணிக்கும் மனோஜுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதாவது மீனா மற்றும் முத்து இருவரும் சீதா ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் உடன் கல்லூரி படிப்பை முடித்து வெற்றிகரமாக வெளியேறி இருப்பதை வீட்டில் இருப்பவர்களிடம் சந்தோசமாக சொல்கிறார்கள்.

அப்போது வழக்கம்போல விஜயா பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்பது போல குத்தி காட்டி பேசுகிறார். அதே சமயம் மனோஜும் அம்மா விஜயா உடன் சேர்ந்து கொண்டு சீதாவை நக்கல் அடித்து பேசுகிறார். அவர்கள் சீதாவை கிண்டல் பேசுவதை பார்த்து கொதித்துப்போன ரோகினி, “அப்பா இல்லாமல் ஒரு ஏழை வீட்டு பொண்ணு படிச்சு முன்னேறுவது எவ்வளவு பெரிய விஷயம் என்று உனக்கு தெரியாதா மனோஜ்.

அதனால இந்த விஷயத்தை நீ கிண்டல் பண்ணாதே ” வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் மனோஜை திட்டுகிறார். ரோகினியை தொடர்ந்து முத்து, “பார்லர் அம்மா இப்பொழுது தான் சரியாக பேசி இருக்கிறார். நீயும் கொஞ்சம் பார்த்து திருந்து” என்று மனோஜை பார்த்து சொல்கிறார். அதன் பிறகு, முத்து, மீனா இருவரும் சீதாவை பார்த்து வாழ்த்து சொல்வதற்காக கோவிலுக்கு செல்கிறார்கள்.

அங்கு எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து ஒன்றாக சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அங்கு சத்யாவும் வந்திருந்தார். எனவே சத்யாவை குத்தி காட்டி பேசும் விதமாக, “நீயாவது படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மார்க் எடுத்து நல்ல பேர் எடுத்திருக்கிறாய்” என்று ஜாடையாக முத்து பேசுகிறார்.

இதை அடுத்து ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஷோரூமுக்கு போவது போல காட்டுகிறார்கள்.அங்கே போனதும் ரோகிணி வரவு செலவு கணக்கை பார்க்கிறார். அப்போதுதான் மனோஜ் எக்கு தப்பாக பணத்தை செலவு செய்திருப்பது ரோகிணிக்கு தெரிய வருகிறது. குறிப்பாக மாசம் சாப்பாட்டுக்கு மட்டும் மனோஜ் 30,000 ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார். அதேபோல ஜோசியர் சொன்னபடி நிறைய செலவு பண்ணி டிரஸ் வாங்கி இருக்கிறார்.

இப்படி காசை கண்ட மாதிரி செலவு பண்ணியதற்கு மனோஜை ரோகிணி திட்டுகிறார். அந்த சமயத்தில் கிரெடிட் கார்டு மூலம் நமக்கு தேவைப்பட்ட நேரம் செலவழித்துக் கொள்ளலாம் என்று ஒருவர் மனோஜிடம் ஆசை காட்டி பேசுகிறார். அப்போது இதெல்லாம் தேவையில்லை வேண்டாம் என்று ரோகினி மனோஜ்க்கு அட்வைஸ் பண்ணுகிறார். ஆனாலும் மனோஜ்க்கு இருக்கும் பேராசை அவரை சும்மா விடவில்லை.

கிரெடிட் கார்டை வாங்கி கடனாளியாக மாறி, ஷோரூமை பறி கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கப் போகிறார். இதையடுத்து ரோகினியும் அவரது தோழியும் ஹாஸ்பிடலுக்கு செல்வது போல காட்டப்படுகிறது.அந்த ஹாஸ்பிடலில் தனக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக ரோகினி சென்றிருக்கிறார்.

இது பற்றிய அவரது தோழி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணியின் தோழி உனக்கு தான் ஏற்கனவே குழந்தை இருக்கிறதே குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இருக்கிறதே. அப்புறம் நீ எதுக்கு பயந்து கொண்டு செக்கப் செய்ய வேண்டும் ஒரு வேலை மனோஜ்க்கு கூட பிரச்சனை இருக்கலாம் இல்லையா என்று சொல்கிறார். அவருக்கு ரோகினி முதலில் நான் செக்கப் செய்யணும். எங்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை சீதா பார்த்து விடுகிறார். உடனடியாக மீனாவுக்கு கால் பண்ணி ரோகினி அவரது தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார் இருவரும் குழந்தை பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று போட்டுக் கொடுத்து விடுகிறார். இதனால் மீனாவுக்கு ரோகிணி மீது சந்தேகம் எழுகிறது. என்னதான் தொடர்ந்து ரோகிணி மீது நிறைய சந்தேகங்கள் இருந்தாலும் ரோகினையும் நிறைய தடவை யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டே வந்தாலும் இனி எல்லாப்பக்கமும் ரோகிணி மனோஜ் இருவருக்கும் பிரட்சனை பிரச்சனை வர இருக்கிறது..

error: Content is protected !!