நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், இந்த தம்பதியினர் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோருடன் கிசுகிசுவில் சிக்கினார் விக்னேஷ் சிவன். இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது, இருந்தும் இருவரும் பேசி சரி செய்து கொண்டனர்.
காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இடம் பெற்றிருந்தார்கள், இதில் நடிகை சமந்தாவுடன் கிசுகிசுவில் விக்னேஷ் சிவன் சிக்கிய விவகாரம் நயன்தாரா கவனத்திற்கு சென்றது. இதனால் நயன்தாரா – விக்னேஷ் இருவருக்கும் இடையில் மிக பெரிய மனக்கசப்பு ஏற்பட்டடு பின்பு சமாதனம் ஆனதாக அப்போது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு படத்திற்கு பிறகு, அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன், இந்த படம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கமிட் செய்யப்பட்ட படம் .ஆரம்பத்தில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக இருந்தது.ஆனால் நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துள்ளதால் கதாநாயகியை மாற்றம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் போட்டியாளராக இருந்து வருகின்றவர் நடிகை திரிஷா, இருவருக்கும் தொழில் ரீதியாக கடுமையான போட்டி இருந்து வருகிறது. நயன்தாரா திருமணம் வரை த்ரிஷாவின் மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்தார். நயன்தாரா தொடர்ந்து நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொணடிருந்தார். நயன்தாரா திருமணத்துக்கு பின்பு சினிமாவில் மிக பெரிய சரிவை சந்தித்து, அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.
அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றில் திரிஷா கமிட்டாகியுள்ளார், இதே போன்று அஜித் படத்திலும் கமிட்டாகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து, அஜித்தை தொடர்பு கொண்டு அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கேட்டுள்ளார் திரிஷா. ஆனால் அஜித் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசுங்க என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஆரம்பத்தில் ஓகே செய்துள்ளார் விக்னேஷ் சிவன். ஒரே நேரத்தில் அஜித் மற்றும் விஜய் என இரண்டு ஸ்டார் படங்களிலும் திரிஷா நடிப்பதால் அடுத்து நான் தான் நம்பர் 1 என்று செம குஷியில் இருந்துள்ளார் திரிஷா. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் திரிஷா நடிப்பதற்கு நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அஜித் நடிக்கும் புதிய படத்தில் இருந்து த்ரிஷாவை கழட்டிவிட்டு விட்டார் விக்னேஷ் சிவன் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய படத்தின் இயக்குனர்களின் வேளைகளில் குறுக்கிட மாட்டார் அஜித் என்பதால் இந்த விவகாரத்தை அஜித் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.

