விமான நிலையங்களில் சித்தார்த் நுழைய தடை… அதிரடியாக களத்தில் இறங்கிய விமான துறை அமைச்சர்..

0
Follow on Google News

நடிகர் சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் தன்னை ஹிந்தியில் பேச சொல்லி துன்புறுத்தியதாக ஏற்படுத்திய சர்ச்சை தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது. என்னையும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி துன்புறுத்தியதாகவும், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இது இந்தியா அப்படி தான் என்று அதிகாரிகள் பேசியதாக மொழி ரீதியான மிகப்பெரிய சர்ச்சையை சித்தார்த் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் அவருடைய குடும்பத்தினரை பரிசோதனை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி என்பது தெரிய வந்தது, மற்ற அதிகாரிகள் ஹிந்தியில் பேச பேசியிருந்தாலும் கூட நடிகர் சித்தார்த்துக்கு ஹிந்தி நன்றாக தெரியும் என்கின்ற ஆதாரமும் வெளியானது. இதனைத் தொடர்ந்து சித்தார்த் பப்ளிசிட்டிக்காகவோ அல்லது ஏதோ ஒரு சர்ச்சையை மொழி ரீதியான உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கில் தான் இதுபோன்று செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் மத்திய விமானம் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் அவர்களை நேரில் சந்தித்த பாஜக மாநில நிர்வாகி மதுரையைச் சேர்ந்த சங்கர்பாண்டி, மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து, நடிகர் சித்தார்த் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார், அதில் நடிகர் சித்தார்த் வேண்டுமென்றே தமிழகத்தில் மொழியை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த பட்டுள்ளது.

மனுவை பெற்று கொண்ட மத்திய அமைச்சர் வி கே சிங், உடனே அதிரடியாக நடிகர் சித்தார்த் விவகாரத்தை கையில் எடுத்தவர், மதுரை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் சித்தார்த் விவகாரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார், அப்போது விமான நிலைய அதிகாரிகள் அங்கே நடந்த சம்பவங்கள் பற்றி மத்திய இணைய அமைச்சர் வி கே சிங்கிடம் விளக்கமும் கொடுத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து விமான நிலைய விதிமுறைகள்படி, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின் போது முழு ஒத்துழைப்பு கொடுக்கமால் சக பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார், பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது அனைத்தும் விமான நிலையத்தின் பயணிகளின் விதிமீறல்களாகும் என அமைச்சர் வி.கே.சிங் அவர்களிடம் அதிகாரிகள் சித்தார்த் மீதான குற்றசாட்டுகளை மேலும் உறுதி செய்துள்ளார்கள்.

இதில் உச்ச கட்டமாக மொழி ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் சித்தார் என்பதால், இந்த விவகாரத்தை சீரியசாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் நடிகர் சித்தார்த் மீது விசாரணை நடத்த விமான அமைச்சகம் குழு அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

குழு அமைத்தவுடன், நடிகர் சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக அறிவுறுத்தப்படுவார், அப்படி சித்தார்த் விசாரணைக்கு நேரில் ஆஜராகும் போது, மதுரை விமான நிலையத்தில் பரிசோதனையில் ஈடுபட்ட சிஆர்எப் அதிகாரிகளும் ஆஜராவார்கள், இரண்டு தரப்பிலும் நடத்தப்படும் விசாரணை மற்றும் சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் சித்தார்த் மீது உள்ள குற்றம் நிரூபிக்க படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி சித்தார்த் மீது குற்றசாட்டுகள் நிரூபிக்கும் பட்சத்தில், சித்தார்த் மற்றும் அவருடன் பயணித்த குடும்ப உறுப்பினர்கள் ஒரு வருடத்திற்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படலாம் என்று, இதனால் இந்தியாவில் எந்த விமான நிலையத்திற்குள் நுழைய முடியாதவறு செய்வதற்கு விமான துறை அமைச்சகத்தில் விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையங்களில் சித்தார்த் நுழைய தடை… அதிரடியாக களத்தில் இறங்கிய விமான துறை அமைச்சர்..