நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதில் இருந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பிரச்சனை மேல் பிரச்சனை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் எதைத் தொட்டாலும் அது மிகப் பெரிய பிரச்சினையாகவே உருவெடுத்து வந்தது. இதனால் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர்…
அந்த வகையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டு, திருமணம் முடிந்ததும் வேண்டாம் என அந்த ஓடிடி நிறுவனம் கல்தா கொடுக்க, சுமார் 25 கோடி நயந்தாரா தரப்புக்கு இழப்பு ஏற்ப்பட்டது. அதன் பின்பு நயன்தாரா தயாரிப்பில் வெளியான கூழாங்குளம் திரைப்படம் தோல்வி, நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்வி.

அஜித் நடிக்க இருந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்ற பட்ட சம்பவம், மேலும் திருமணத்திற்கு முன்பு நயன்தாரா கமிட்டான படங்களின் தயாரிப்பளர்கள், உன் கால் சீட் தேவையில்லை என கொடுத்த அட்வான்ஸ் தொகையை நயன்தாராவிடம் திரும்பி வாங்கி சென்ற சம்பவங்கள் அரங்கேறியது. இப்படி தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி, நஷ்டத்தை சந்திப்பது மட்டுமில்லாமல் கூடவே அவமானத்தையும் சந்தித்து வந்தனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
இப்படி கடும் சோதனை கட்டத்தில் இருந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், உறவினர்கள் சிலர் நீங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் பிரச்சனை தீரும் என்கிற அறிவுரையை ஏற்று, கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு இனி நமக்கு வெற்றி தான் என்கிற நம்பிக்கையுடன் திருப்பி வந்தனர்.
இந்நிலையில் த ஹீரோயின் சப்ஜெக்டன அன்னபூரணி என்கின்ற படத்தில் திருமணத்திற்கு முன்பு கமிட்டாகி இருந்தார் நயன்தாரா, இந்த படத்தில் ஒரு சமையல் செய்யும் சமையல்கார பெண்ணாக நடிக்க இருக்கிறார் நயன்தாரா. திருமணம் முடிந்த உடனே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று உறுதியளித்திருந்தார் நயன்தாரா.
இந்நிலையில் இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்க இருந்த நிலையில், தற்போது அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் அன்னபூரணி படத்திற்காக ஒதுக்கிய பட்ஜெட் தொகையை அந்த தயாரிப்பாளர் புதியதாக சினிமா ஸ்டுடியோ திறப்பதில் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இதனால் நயன்தாரா நடிக்க இருந்த அன்னப்பூரணி படம் கைவிட படலாம் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.இந்நிலையில் நயன்தாரா குலதெய்வ வழிபாடு நடத்தி திரும்பியுள்ள நிலையில், கிடப்பில் போடப்பட்ட அன்னபூரணி திரைப்படம் தற்பொழுது உயிர்த்தெழுந்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ள நயன்தாரா, இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நயன்தாராவுக்கு வர தொடங்கியதை தொடர்ந்து, சினிமாவில் மிக பெரிய சரிவில் இருந்த எங்களை, குலதெய்வ வழிபாடு செய்த பின்பு எங்கள் குலதெய்வம் தான் மீண்டும் காப்பாற்றி வாய்ப்புகளை அமைத்து கொடுத்துள்ளது என மகிழ்ச்சியில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் இருப்பதாக கூறப்படுகிறது.


