இரண்டாயிரம் கோடி பட்ஜட்.. சங்கர் இயக்கத்தில் கேஜிஎப் யாஷ்…

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம்சரண் இயக்கத்தில் ஒரு பேன் இந்தியா படம் மற்றும் நடிகர் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். சமீப காலமாக இந்திய சினிமாவில் வரலாற்று கதைகளை மையப்படுத்தி வெளியாகும் பிரம்மாண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேல்பாரி நாவலை தழுவி தன்னுடைய அடுத்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் இயக்குனர் சங்கர். மூன்று பாகங்களாக இந்த படம் வெளியாக இருப்பதால் சுமார் ஐந்து வருடங்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் வெளியாகிறது.

ஒவ்வொரு பாகத்திற்கும் சுமார் 700 கோடி வரை பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டு மூன்று பாகத்திற்கும் சுமார் 2000 கோடிக்கு மேல் இந்த படத்திற்கான பட்ஜெட் செலவாகும் என்று தெரிகிறது. ஒவ்வொரு பாகமும் முடித்து படம் வெளியான பின்பு அடுத்த பாகத்திற்கான வேலைகள் தொடங்கும். இப்படி சுமார் ஐந்து வருடம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடக்க திட்டமிட்டுள்ளார் சங்கர்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ஐந்து வருடங்கள் ஒரே படத்தில் கமிடாக மாட்டார்கள். மேலும் இந்த படம் பேன் இந்தியா படம் என்பதால் பிற மொழியில் உள்ள பிரபலமான நடிகர்களை தேடி வந்துள்ளார்.அந்த வகையில் இந்தப் படத்தில் கே ஜி எஃப் கதாநாயகன் யாஷ் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரபல பிரெஸ்டிஜ் என்கிற கார்பொரேட் நிறுவனம், தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும், இவர்கள் சமீபத்தில் இயக்குனர் சங்கரை சந்தித்து அவர்கள் படம் இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள், சங்கர் இயக்கம் வேல்பாரி படத்தை இயக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.