கஸ்தூரி தாய் முன்னே நடந்த அமைதிப்படை ஆல்வா சீன்… சத்யராஜ் அந்த கட்சியில் நடிக்கும் போது என்ன செய்துள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லை.இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனை வெடித்த நிலையில், அதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பற்றி பேசிய பேச்சுகள் எல்லாம் தற்போது மீண்டும் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜா ராணி படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நடிகர் சத்யராஜ், நடிகை நயன்தாரா குறித்து பேசியது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.

அதில் ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் போது அந்த நடிகைகள் அப்பாவை கட்டிப்பிடித்து அழும்படியான காட்சிகள் வைக்க வேண்டும் என கூறி இருந்தார். அவர் காமெடியாக சொன்ன இந்த விஷயத்தை அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட் நடிகை நயன்தாராவே கைதட்டி ரசித்தார். ஆனால் அந்த பேச்சு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் அவர் அத்துமீறி இருப்பது போல் தோன்றுகிறது. இதுபற்றி நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என கூறி இருந்தார்.

1994 இல் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து அமைதிப்படை என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகை கஸ்தூரி அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பார். இந்நிலையில் அமைதிப்படை காட்சி குறித்து கஸ்தூரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சத்யராஜுடன் அமைதிப் படத்தில் நடித்ததை மறக்க முடியாது.

அவரது அற்புதமான நடிப்பு திறமையை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அவருடன் அறிவுப்பூர்மான, நகைச்சுவை நிறைந்த உரையாடல்கள் ஷூட்டிங்கின்போது இருந்தது. அந்த படத்தில் நான் இடம்பெற்ற அனைத்து காட்சிகளையும் பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் பயனர் ஒருவருக்கு ரீப்ளே கொடுத்த கஸ்தூரி, ரி, ‘சத்யராஜ் ஒரு ஜென்டில்மேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை அவர் பத்திரமாக பார்த்துக் கொண்டார். எந்த நிலையிலும் நான் அசவுகரியமாக உணரவில்லை.

ஷூட்டிங்கின்போது என் அம்மாவும் உடன் இருந்தார். அவர் என்னிடம் சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோரின் பணிகளை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது என்றார். ஷூட்டிங்கில் நடந்தது எல்லாம் முழுவதும் தொழில் சார்ந்ததுதான். எந்த இடத்திலும் தேவையற்ற செயலை யாரும் செய்யவில்லை’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த அல்வா காட்சியை மட்டும் படமாக்க 4 மணிநேரம் ஆனது. நாங்கள் இதை வெறும் நடிப்பாகவே பார்த்தோம். அந்த சீன் எடுக்கும்போது என் அம்மாவும் அங்கு இருந்தார்.

ஒரு காட்சியை படமாக்கும் போது மணிவண்ணன் சாரும், சத்யராஜ் சாரும் எப்படி டயலாக்கை மெருகேற்றுகிறார்கள் என்பதை பார்த்து என் அம்மாவே ஆச்சர்யப்பட்டார். அந்த சீனில் அவர் மோசமாக நடந்துகொள்ளவில்லை. அமைதிப்படை படத்தில் சத்யராஜ் உடன் நடித்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து நான் பெருமைகொள்கிறேன்” என சர்ச்சைக்கு கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.