கடன் தொல்லை சமாளிக்க முடியவில்லை… சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு…

0
Follow on Google News

எந்தவொரு திரையுலக பின்னணியுமின்றி சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நட்சத்திரங்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது கடன் பிரச்சினையில் இருப்பதாகவும், கடன் தொல்லையை ஒழித்துக் கட்ட தடாலடியாக ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்த சிவகார்த்திகேயன் தனது தனித்துவமான மிமிக்ரி திறமையால் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக பணியாற்றினார். தொலைகாட்சி நிகழ்ச்சி, மேடை நிகழ்ச்சி என எந்த இடமானாலும் சிவகார்த்திகேயனின் இன்ஸ்டன்ட் கமெண்ட், நக்கலான பேச்சு, மற்றும் நய்யாண்டி போன்றவற்றை ரசிக்காத ஆளே இல்லை என்று கூறலாம்.

சிவகார்த்திகேயனின் கலைத் திறமையை உணர்ந்த நடிகர் தனுஷ், 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதேசமயம், இயக்குனர் பாண்டிராஜும் அவர் இயக்கிய மெரீனா படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இப்படி, ஒவ்வொரு படியாக அடிவைத்து சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராஜ் இயக்கத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட் அடித்ததால், சமந்தா, நயன்தாரா என முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் தன் மார்க்கெட்டும் உச்சத்தை நோக்கி செல்லவே கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்.

மேலும், படங்களில் சம்பாதித்த கோடிகளை வைத்து SK Production என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகங்களைக் கொண்ட சிவகார்த்திகேயன் பல்வேறு படங்களுக்கு பாடல்களும் எழுதிக் கொடுத்துள்ளார். இப்படி எக்கச்சக்க திறமைகளைக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சமீப காலமாக கடன் பிரச்சினைகளில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அண்மையில் வெளியான படங்களும் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்காததால், சிவாகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவதிலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தன் நிறுவனத்தின் நிதிச் சிக்கலகளைச் சமாளிக்க நடிகர் சிவகார்த்திகேயன் பல கோடிகளை வெளியில் கடன் வாங்கியிருப்பதாகவும், தற்போது அந்தக் கடனை அடைக்க திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு வழிகளில் முட்டிமோதி முயற்சித்த சிவகார்த்திகேயன், இறுதியாக, கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆமாங்க…. ஆயிரமா? இலட்சமா? எளிதில் அடைப்பதற்கு… கோடிக்கணக்கில் கடனாளியாகிவிட்டால் இப்படியெல்லாம் யோசிக்கத்தான செய்வாங்க..

இதனாலேயே, படத்திற்கு 35 கோடி முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி விட்டாராம். இதையறிந்த கோலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிர்ச்சியில் இருகின்றனராம்.. சிவகார்த்திகேயனின் சம்பள விவகாரம் வெளியாகவே, பலரும் சோஷியல் மீடியாக்களில் இது குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.