விஜய்க்கே விபூதி அடித்த விஜய் ரசிகர்கள்… லியோ ஆடியோ விழா ரத்துக்கு பின்னணியில் நடத்த மோசடி..

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது, இந்நிலையில் விஜய் அரசியல் என்ட்ரி, சமீபத்தில் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்கு விஜய் லியோ ஆடியோ வெளியிட்டு விழாவில் பதிலடி கொடுப்பார் என்கிற ஒரு பரபரப்பு நிலவி வந்த நிலையில்,தேடிரென லியோ ஆடியோ வெளியிட்டு விழா நடைபெறாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது,

லியோ ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டது பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாமல் போனதற்கு முக்கிய காரணம் விஜய் ரசிகர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது,

அதாவது லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்ள பாஸ் அனுப்பப்பட்டிருந்தது, குறிப்பாக இந்த ஆடியோ நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக முழுவதும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட லியோ ஆடியோ வெளியீட்டு விழா பாசை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் 5000, 10000 ரூபாய்க்கு விற்பனை செய்ய தொடங்கி விட்டார்கள், அதுவும் ஒரு சில இடங்களில் விளம்பரப்படுத்துவது போன்று வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான பாஸ் தங்களிடம் உள்ளது மற்றவர்களை விட குறைந்த விலைக்கு நாங்கள் தருகிறோம் என்று பேசி விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் விற்பனை செய்யும் ஆடியோவும் லீக் அவுட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டும் இல்லாமல் நேரு உள் விளையாட்டு அரங்கில் சுமார் 6000 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் உள்ளது, அதற்கு ஏற்றார் போல் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்டம் தோறும் பாஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளனர், ஆனால் பல இடங்களில் தங்களுக்கு வந்த பாசலை கலர் ஜெராக்ஸ் எடுத்து மேலும் பல நபர்களுக்கு கொடுத்துள்ளார்கள் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

இதனால் சுமார் 6000 பேர்கள் மற்றும் கலந்து கொள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சுமார் 50,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கட்டுப்பாடு இன்றி தங்களுக்கு வந்த பாஸ்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது அந்த வகையில் தன்னுடைய ரசிகர்களின் இந்த செயல்பாடுகள் விஜயின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து தன்னுடைய ரசிகர்கள் செய்யும் இது போன்ற செயல்களை மீறி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினால் அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து விடும், குறிப்பாக சமீபத்தில் சென்னையில் நடந்த மறக்குமா நெஞ்சம் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையை விட மோசமாக விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அறிந்த விஜய்.

லியோ ஆடியோ வெளியிட்டு விழா நடந்தால், அது தனக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என முடிவு செய்து, உடனே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்ய விஜய் உத்தரவிட்டதன் பெயரிலே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காத என அறிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதுபோன்ற செயல் பட்டு வரும் தகவல் அறிந்த பலரும் இதுபோன்ற விசில் அடிச்சான் ரசிகர்கள் எந்த கட்டுப்பாடு இன்றி நடந்து கொள்ளும் இது போன்ற ரசிகர்களை வைத்துக் கொண்டு விஜய் அரசியலில் நுழைவது என்பது தன் தலையிலே தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் செயல் என்றும் விமர்சனம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.