ஏமாற்றிய ரவீந்திரன்….. அய்யோயோ என் வாழ்க்கையே போச்சே… கடும் சோகத்தில் மகாலக்ஷ்மி…

0
Follow on Google News

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வில்லித்தனமான நடிப்பு அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்துள்ளார்.

பின்பு சக நடிகருடன் தொடர்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எதிர்கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மீது சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் புகார் அளித்திருந்தார்.

பாலாஜி கபா Madhav Media Private Ltd என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் மூலம் நடிகர் சிம்பு நடித்த `ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களை பாலாஜி கபா தயாரித்திருக்கிறார். பாலாஜி கபாவும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தரும் நண்பர்கள். அதனால் இருவரும் சேர்ந்து பிசினஸ் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அந்தத் திட்டத்தில் 15,83,20,000 ரூபாயை பாலாஜி கபா முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்தத் திட்டத்தை ரவீந்தர் சொன்னபடி தொடங்கவில்லை. அது குறித்து ரவீந்தரிடம் பாலாஜி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பாலாஜி, தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பத் தரும்படி ரவீந்தரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரவீந்தர், மழுப்பலான பதிலை தெரிவித்து மாதக்கணக்கில் பாலாஜியை ஏமாற்றிவந்திருக்கிறார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாஜி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், 2020-ம் ஆண்டு Libra Production Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்திவரும் ரவீந்தர் என்பவர் தனக்கு அறிமுகமானார். பின்னர் அவர், நகராட்சி திடக்கழிவுகளை மின்ஆற்றலாக மாற்றுதல் திட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அந்தத் திட்டத்தில் நான் சுமார் 16 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால், ரவீந்தர் அந்தத் திட்டத்தை ஆரம்பிக்காமல் என்னை ஏமாற்றிவந்தார்.

எனவே, ரவீந்தரிடமிருந்து என்னுடைய பணத்தை மீட்டுத் தருவதோடு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 7ஆம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமினை தள்ளுபடி செய்துள்ளது.அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறையில் இருக்கிறார் ரவீந்தர்.

இந்நிலையில் மகாலட்சுமி – ரவீந்தர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி – ரவீந்தர் ஜோடி தங்களின் முதலாமாண்டு திருமண நாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடியது. இது மட்டும் இன்றி ரவீந்தர் இவ்வாறு மோசடி செய்வதினைப் பற்றி மகாலட்சுமியிடம் இதுவரை கூறியது இல்லையாம்.

திருமணத்திற்கு முன் இவ்வாறு வேலை செய்ததை பற்றியும் கூறவில்லையாம். இதனால் ரவீந்தர் தன்னை ஏமாற்றியதாக அவர் எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம். மேலும் கணவரின் கைதால் மன அழுத்தத்தில் காணப்படும் மகாலட்சுமி எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகின்றார். ரவீந்தர் மொபைல் போன் நம்பரை மாற்றி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. நடிகை மகாலட்சுமி பணத்திற்காகவே திருமணம் செய்துள்ளதாகவும், இந்த பிரச்சினை ஆரம்பத்தில் தெரிந்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.