படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய யோகி பாபு… இப்பவே எனக்கு பத்து லட்சம் வேண்டும்…

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக இருந்த யோகி பாபு, தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் காமெடி நடிகனாக நடித்து வந்தார். தொடர்ந்து கிடைக்கும் அனைத்து பட வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொண்டு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வாழ வந்து கொண்டிருக்கிறார்.

வடிவேலுவின் வீழ்ச்சி எப்படி நடிகர் சூரிக்கு சினிமாவில் மிக பெரிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்தத, அதேபோன்று தற்பொழுது நடிகர் சூரியின் மார்க்கெட் சரிவு யோகி பாபுவை காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் அமர வைத்துள்ளது. ஆனால் நடிகர் சூரி பிஸியாக இருக்கும் போதே அவருக்கு சமமான எண்ணிக்கை படங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு.

இந்த நிலையில் யோகி பாபு சம்பளம் ஒரு நாள் கால் சீட் விகிதம் வாங்கி வருகிறார். யோகி பாபு சினிமாவில் பிசியான பின்பு தினந்தோறும் குறைந்தது 10 லட்ச ரூபாய் அவருக்கு வரவு வந்து கொண்டே இருக்கும். அதாவது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய அட்வான்ஸ் கொடுப்பது, அல்லது நடித்து முடித்த படத்தில் பாக்கி பணத்தை கொடுப்பது இப்படி தொடர்ந்து சுமார் ஒரு நாளைக்கு பத்து லட்ச ரூபாய் யோகி பாபு வரவு வந்து கொண்டே இருந்துள்ளது.

தினமும் இப்படி வரவு வருவது ஒரு சென்டிமென்ட் ஆக கருதும் யோகி பாபு, என்றாவது ஒரு நாள் யாரும் பணம் தரவில்லை என்றால் அன்று கடும் அப்செட் ஆகிவிடுவார். இந்த நிலையில் ஒருநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகி பாபு, அன்று யாரும் அவருக்கு பணம் கொண்டு வந்து தரவில்லை, இதனால் கடும் அப்செட் ஆன யோகி பாபு படப்பிடிப்பு தளத்திலிருந்து பாதியில் வெளியாகியுள்ளார்.

அங்கிருந்து நேரடியாக தயாரிப்பாளரை சந்தித்து எனக்கு தினமும் 10 லட்சம் ரூபாய் வரவு வரும், இதை நான் செண்டிமெண்டாக கருதுகிறேன். ஆனால் இன்று யாரும் எனக்கு பணம் கொண்டு வரவில்லை. அதனால் எனக்கு மன நிம்மதி இல்லாமல் இருக்கிறது. ஆகையால் நீங்கள் இன்று ஒரு பத்து லட்ச ரூபாய் எனக்கு கொடுத்து, எனக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என யோகிபாபு தெரிவித்துள்ளார்.

இது என்ன வினோதமான சென்டிமென்டாக இருக்கிறது என ஆச்சரியப்பட்ட தயாரிப்பாளர். உடனே ரூபாய் 10 லட்சத்தை யோகிபாபுவுக்கு கொடுத்துள்ளார். அதன் பின்பு பெரும் மகிழ்ச்சியில் யோகிபாபு படப்பிடிப்பு கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!