விஜய்யின் நம்பிக்கை பெற்ற லலித்… பல கோடியில் மிக பிரமாண்டமான மல்ட்டி பிளஸ் தியேட்டர்…

0
Follow on Google News

நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் லலித் இருவருக்கும் மிக நெருக்கிய நட்பு உண்டு, சினிமா ரீதியாக மட்டுமில்லாமல் தொழில் ரீதியாகவும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஆரோக்கியமான ஒரு நட்பு உண்டு. அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் விஜய் அவருடைய அம்மா சோபா பெயரில் சோபா கல்யாண மண்டபம் அவருக்கு சொந்தமாக உள்ளது.

அதேபோன்று சென்னை பேரூரில் மனைவி சங்கீதா பேரில் சங்கீதா திருமண மண்டபமும் உண்டு. இதில் சாலிகிராமத்தில் உள்ள சோபா கல்யாண மண்டபத்தை சினிமா தயாரிப்பாளர் லலித் லலித் குமாரிடம் மாதத்திற்கு 7 லட்சம் விதம் சுமார் 15 வருடத்திற்கு லீசுக்கு விட்டிருந்தார் நடிகர் விஜய்.இந்த நிலையில் சோபா கல்யாண மண்டபத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் மாதம் 10 லட்சம் ரூபாய் வாடகைக்கு கொடுக்க முன்வந்துள்ளது.

இது லலித் மூலமாகவே வந்துள்ளது, உடனே லலித் விஜய்யிடம் பேசி தன்னுடைய 15 வருட லீஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு விடலாம் என விஜய்க்கு ஐடியா கொடுத்து விஜய்க்கு சொந்தமான திருமண மண்டபம் ரிலைஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் – விஜய் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய்க்கு 125 கோடி சம்பளமும், லோகேஷ் கனகராஜ்க்கு 20 கோடி சம்பளம், மற்றும் இதர தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் சேர்த்து ரூபாயில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் படம்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தற்பொழுது இந்த படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்து வருகிறது.

அனைத்து மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமையை சுமார் 150 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு, இறுதியில் 175 கோடி ரூபாய்க்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வெறும் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் தான். அடுத்தடுத்து இந்த படத்தின் விற்பனை சுமார் 400 கோடி வரை வியாபாரம் நடக்கும் என்று உறுதியான தகவல் தெரிவிக்கிறது. 150 கோடி ரூபாய் வரை இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்துக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக வலம் வரும் லலித் சென்னை வண்டலூர் அருகே மிக பிரமாண்டமான திரையரங்குகளை கட்டி வருவதாகவும், இதில் 5 ஸ்க்ரீன் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் இந்த திரையரங்கு திறக்கப்பட இருக்கிறது.