நுங்கு புகழ் டாக்டர் கொடுத்த டிப்ஸ்… பின்பற்றி பாதிக்கப்பட்டதாக இருவர் புகார்…

0
Follow on Google News

சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவ ஆலோசனை வழங்கி சமூக வலைதளத்தில் மிக பிரபலமானவர் டாக்டர் சார்மிகா, நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், ஒரு குலோப்ஜாம் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும், என யூடியூபில் மருத்துவ டிப்ஸ் கொடுத்து சர்ச்சைகளை ஏற்படுத்தி அந்த சர்ச்சைகள் மூலம் பிரபலம் அடைந்தவர் டாக்டர் சார்மிகா.

முடி வளர்வதற்கு தினமும் எண்ணெய் தேய்க்கும் போது மசாஜ் செய்தால் முடி வளரும், இப்படி பல டிப்ஸ் கொடுத்து வந்த டாக்டர் சர்மிகா, அவர் அதற்கு கொடுக்கும் விளக்கம் விசித்திரமாக இருக்கும். கடவுள் நம்மளோட ஆர்கான்ஸ் எந்தெந்த வடிவத்துல இருக்கோ, அதுக்கு ஏற்ற மாதிரிதான் மூலிகைகளையும் படைச்சிருக்காரு. அப்படிதான் நுங்கையும் படைச்சிருக்கார் என டாக்டர் சர்மிகா மருத்துவ டிப்ஸ் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டு வந்தார்.

இந்த நிலையில் சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் தவறான மருத்துவ ஆலோசணைகளை வழங்குவதாக இந்திய மருத்துவ இயக்குனரகதிற்கு புகார் சென்றது. இதனை தொடர்ந்து டாக்டர் சர்மிகா மீது வந்த புகாரின் அடிப்படையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவிற்கு, இந்திய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார் மருத்துவர் ஷர்மிளா.இந்நிலையில் தற்பொழுது மேலும் ஒரு சிக்கல் மருத்துவர் சர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஷர்மிளா மருத்துவ டிப்ஸ் பார்த்து பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தற்பொழுது இரண்டு புகார்கள் இந்திய மருத்துவ ஆணையத்திடம் சென்றுள்ளது.

ஷர்மிளா மருத்துவ டிப்ஸ் பார்த்து பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தற்பொழுது இரண்டு புகார்கள் இந்திய மருத்துவ ஆணையத்திடம் சென்றுள்ளது, புகார் கொடுத்தவர்களிடம் நேரில் விசாரிக்கவும் முடிவு செய்துள்ள இந்திய மருத்துவ ஆணையம் விசாரணைக்கு பின்பு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.