விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் விஜய் திரிஷாவுடன் திருமண வரவேற்பு விழாவில் ஜோடியாக கலந்துகொண்டது குறித்து பலரும் பலவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். அதுவும் தனது மனைவி சங்கீதாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே விஜய், இப்படி ஒரு விஷயத்தை செய்ததாகவும் பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து மகாபலிபுரத்தில் கடந்த 7ம் தேதி நடந்த மகளிர் தின விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் விஜய், இப்போது நடந்து வரும் பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அதுகுறித்து எல்லாம் கவலைப்பட வேண்டாம். நீங்க எதுக்கும் ஹர்ட் ஆகாதீங்க. அந்த அளவுக்கு அது ஒண்ணும் வொர்த் இல்லை என்றும் கிண்டலாக கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் உட்பட பலரும் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

26 ஆண்டு காலம் தன்னுடன் வாழ்ந்த மனைவி சங்கீதா வொர்த் இல்லையா? எனக் கேட்டு விஜயின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சங்கீதா தனது விவகாரத்து மனுவில் தனது கணவர் தொடர்பில் இருக்கும் அந்த நடிகையின் பெயரை தேவைப்பட்டால் கூறுவேன் என்று குறிப்பிட்டு சொல்லி இருந்தார். அப்படி என்ன அவர் அதை சொல்லி நம்மை இழிவுபடுத்துவது? நாமே அதை மக்களுக்கு தெரிவிப்போம் என்று திரிஷா சொன்னதை கேட்டுதான் விஜய் இந்த விஷயத்தை செய்தார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும் திரிஷாவுடன் தனக்கு இருக்கும் இந்த நெருக்கமான உறவு தனது அரசியல் புகழ் மக்கள் செல்வாக்கு குறிப்பாக கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் தன் மீது வைத்திருக்கும் மரியாதை ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பு என சிதைக்கப்படும் என்று உணராமல், எதை பற்றியும் யோசிக்காமல் திரிஷாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு விஜய் இப்படி பப்ளிக்கில் தன் தவறை ஒழுங்கீன செயல்பாட்டை ஒத்துக் கொண்டது விஜயின் மாபெரும் தோல்வி என்றும், விஜயை கைப்பாவையாக சொன்னபடி கேட்கும் ஒரு ஆளாக திரிஷா மாற்றி இருப்பதையும் அப்பட்டமாக இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாகவும் பலரும் கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில் ஈரோட்டில் ஃபேக்டரி தொழிலாளர்களுடன் சஞ்சய் ஒரு போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய் தனது மனைவியை வொர்த் இல்லை என்று சொன்னார். ஆனால் அவரது மகன் வொர்த் என்று இந்த போட்டோ மூலம் நிரூபித்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் ஜேசன் சஞ்சய் இப்போது சிக்மா என்ற படத்தை டைரக்ட் செய்து முடித்துள்ளார். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. ஆக மொத்தம் வொர்த் ஆன ஒரு மகனாக சங்கீதாவுக்கு பெருமை சேர்க்கும் ஜேசன் சஞ்சய், வொர்த் இல்லை என்று சொன்ன தனது அப்பா விஜய்க்கு தொழிலாளர்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வொர்த் என்றால் என்ன என்பதை புரிய வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

