விஜய் படத்தில் இருந்து விரட்டப்பட்ட விஜய் சேதுபதி… விஜய் டென்ஷனுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி, பொதுவாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதை குறித்து பெரிதாக கவலைப்பட மாட்டார். கிடைக்கும் வாய்ப்புகளில் அதிக சம்பளம் கொடுத்தால் எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி நடிப்பார் என்கின்ற ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் உண்டு.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி பிரம்மாண்டமாக நடித்திருப்பார். இதன் பின்பு அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் பெருமளவில் குவிய தொடங்கியது. இந்த நிலையில் ஹீரோவாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் அடுத்தடுத்து வில்லனாக நடிக்கும் பட்சத்தில் அந்த நடிகருக்கான இமேஜ் பெருமளவு பாதிக்கப்படும்.

இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் விஜய் சேதுபதி கவலைப்படாமல் தனக்கு அதிக சம்பளம் கிடைத்தால் போதும் என்று தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக தொடர் தோல்வியின் காரணமாக மிகப்பெரிய சரிவை சந்தித்து வரும் விஜய் சேதுபதி மீண்டும் விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தான் மாஸ்டர் படத்தையும் தயாரித்தவர், மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் எடுப்பதற்கான அட்வான்ஸ் தொகையும் விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் லலித் கொடுத்திருந்தார், ஆனால் விஜய் சேதுபதி நடவடிக்கைகள் மற்றும் அவருடைய அணுகுமுறை லலித்துக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி அட்ராசிட்டி தாங்க முடியாமல், நீ என் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று நேரடியாக விஜய் சேதுபதி அலுவலகத்திற்கே சென்று கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிவிட்டு திரும்பியுள்ளார் லலித்.இதனால் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பது லலித்துக்கு விருப்பம் இல்லை அதனால் இயக்குனரிடம் வேறு ஒரு நடிகரை போடுங்க என்று தெரிவித்து விட்டார் தயாரிப்பாளர் லலித்.

ஆனால் விஜய் ஓகே செய்துவிட்டால் லலித் மறுக்க முடியாது என, விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பது குறித்து விஜய்யிடம் பேசியுள்ளார் லோகேஷ். மேலும் நீங்க தான் லலித்திடம் பேச வேண்டும் என விஜய்யை வலியுறுத்தியுள்ளார் லோகேஷ். இதனை தொடர்ந்து இது குறித்து லலித்திடம் பேசியுள்ளார் விஜய், அதற்கு விஜய் சேதுபதி அட்ராசிட்டி குறித்து சொன்ன லலித், மேலும் விஜய் சேதுபதியுடன் நடந்த பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.

உடனே விஜய் சேதுபதியா இப்படி.? என டென்ஷனான விஜய் மீண்டும் தன்னுடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதிக்கு கொடுக்க மறுத்துவிட்டார் விஜய். இந்த நிலையில் விஜய் படத்தில் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தாலும், அவருடைய அணுகுமுறையால் விஜய் பக்கமே நெருங்க முடியாமல் விரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.