அடம்பிடிக்கும் அஜித்… விஜய் அதை செய்துவிட்டார்.. நானும் அதை செய்தே தீருவேன்..

0
Follow on Google News

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிப்பில் வாரிசு வெளியான அதே தேதியில் வெளியானதால் இரண்டு படங்களும் நேரடி போட்டியில் களம் கண்டது. இந்த நிலையில் அஜித், விஜய் இருவரும் பொங்கல் ரேஸில் நேரடியாக களம் கண்டதால், இரண்டு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படமே மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது, ஆனால் அஜித் நடிக்கும் புதிய படம் ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் மாற்றம் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்கும் புதிய படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே அந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக அஜித் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுவிட்டது.

அதேபோன்று விஜய் விஜய்யை பின்பற்றி தன்னுடைய படத்தின் டைட்டிலை முன்கூட்டியே அறிவித்த பின்பு தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்பதில் அஜித் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது