ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்.. பல கோடியை இழக்க முடிவு செய்த விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கு, அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்கும் விஜய், சுமார் 400 கோடி ரூபாய் வருடத்திற்கு வருவாய் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரும் இருக்கும் விஜய், வருடத்திற்கு சுமார் 400 கோடி ரூபாயை இழக்க அவர் மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்றும், அந்த வகையில் சினிமாவில் நடித்துக் கொண்டே தான் அரசியலில் என்ட்ரி கொடுப்பார் என பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் நடிகர் விஜய் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார், எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும். அந்த வகையில் சினிமாவில் நடித்துக் கொண்டு அரசியலில் என்ட்ரி கொடுத்தால் சினிமா – அரசியல் இரண்டும் சரிவை சந்திக்கும், அதனால் சுமார் மூன்று வருடங்கள் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் முழு நேரம் அரசியலில் இறங்கி ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் கட்சி கட்சியை களம் இறக்கவும் முடிவு செய்துள்ளார் விஜய் என்றும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை ஒரு ட்ரெய்லராகவே கருதும் விஜய் சட்டமன்றத் தேர்தலில் தான் முழுமையாக களம் இறங்கவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் விஜய் சார்ந்த கட்சியினர் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு அதிகமாக உள்ளதோ.? அந்த தொகுதியை தேர்தெடுத்து அதில் நான்கு இடத்தை மட்டும் தேர்வு செய்து விஜய் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய்.

நடிகர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் சிலர் விஜய்க்கு பின்னணியில் இருந்து செய்யப்பட்டு வரும் நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றம் சார்பாக போட்டியிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றியைப் பெற்றார்கள்.

இந்நிலையில் தற்பொழுது விஜயின் ஆலோசகராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் விஜய்க்கு சில அறிவுரையை வாழ்கியுள்ளார்கள் என்றும், அதில் நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஆதரவாக போட்டியிட்ட அணைத்து வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் அல்லது வாய்ஸ் கொடுத்திருந்தால் இன்னும் அதிக இடங்களை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வெற்றி பெறுக கூடும் விஜய்யிடம் அவருடைய ஆலோசகர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தற்பொழுது உள்ள தமிழக அரசியல் நிலவரப்படி, உங்களுடைய அரசியல் என்ட்ரி மக்கள் மத்தியில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று, சில உதாரணங்களை குறிப்பிட்ட விஜய்க்கு அவருடைய ஆலோசகர்கள் மிக பெரிய நம்பிக்கையை கொடுத்து வருவதால்,அரசியலில் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக விஜய் இருப்பதால், அவருடைய அரசியல் வருகையில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்படுகிறது.