கைமாத்தாக தான் விஜய் 1 கோடி கொடுத்துள்ளார்… சும்மா ஒன்னும் கொடுக்கல…

0
Follow on Google News

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்ற பின்பு நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்தார்கள், அப்பவே அதை கட்ட ஆரம்பித்தால் இப்பொழுது முடித்து இருக்கலாம், மேலும் அப்போது நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ஆரம்பித்து இருந்தால் கூட 20 கோடிக்குள் கட்டி முடித்து இருக்கலாம். இந்நிலையில் கட்டிடம் கட்ட காலம் தாமதம் செய்வதால் பட்ஜெட் அதிகரித்து கொண்டே உள்ளது. கோடிகள் செலவழித்தால் தான் அந்த கட்டிடத்தை முழுமையாக கட்ட முடியும் என்று மாறியது.

இந்த கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் சங்கத்தினர் கலை நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் வசூல் செய்து கட்டி விடலாம் என்று நடிகர் சங்கம் எடுத்த முயற்சி கைகொடுக்கவில்லை, காரணம் மக்கள் ரெம்பவே உஷாராக உள்ளனர், இந்த நடிகர் சங்கம் கட்டிடத்தால் மக்களுக்கு என்ன நன்மை.? நீங்க கட்டிடம் கட்ட நாங்க ஏன் பணம் கொடுக்க வேண்டும் என நடிகர் சங்கம் நடத்திய கலைநிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிதனர்.

மேலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஆளுக்கு 1 கோடி கொடுத்தாலே நடிகர் சங்கத்தை கட்டி முடித்து விடலாம், அப்படியிருக்கையில், எதற்காக நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட மக்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இதற்கு முன்பு நடத்திய கலை நிகழ்ச்சிகள் கிடைத்த சிறிய தொகையில் கட்டிடம் கட்டப்பட்டு, அதற்கு மேல் பணம் இல்லாமல் கட்டிடம் பாதியிலே நிற்கிறது.

மேலும் இந்த கட்டிடம் கட்டுவதற்கு காலம் தாமதம் செய்தால், இதுவரை கட்டடப்பட்டு பாதியிலே நிற்கும் கட்டிடமும் வீணாகிவிடும் என பல கட்டுமான பொறியாளர்கள் எச்சரித்து வந்தனர், அந்த வகையில் இனி கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் மக்களிடம் சுரண்டி கட்டிடம் கட்ட முடியாது, காரணம் மக்கள் ரெம்பவே உஷாராகிவிட்டார்கள், அதனால் நடிகர்களிடமே வசூல் செய்து கட்டிடம் கட்ட முடிவு செய்த நடிகர் சங்கம்.

நடிகர் கமல்ஹாசன், விஜய் ஆகியோரிடம் நிதி வசூல் செய்துள்ளது,அவர்களும் தலா ஒரு கோடி ரூபாய் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு கொடுத்துள்ளார்கள். பாதியிலே நிற்கும் இந்த கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்றால் 40 கோடி ரூபாய் தேவை என கணக்கிட்டப்பட்டுள்ளது, இந்நிலையில் விஜய் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளார், அவருடைய தாராள மனதை பாராட்ட மனம் இல்லை என்றாலும் கூட விமர்சனம் செய்யாமல் இருக்க என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் சில்லறையை சிதறவிட்டு கொண்டிருக்கையில், விஜய் சும்மா ஓன்று 1 கோடியை தூக்கி கொடுக்கவில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு வங்கியில் இருந்து கடன் பெற்று கட்டிடம் கட்ட இருக்கும் விஷால் அணியினர், சுமார் 40 நடிகர்களிடம் ஒவ்வொருவரிடமும் தலா 1 கோடி வசூல் செய்து, மொத்தம் வசூல் செய்த 40 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டி தொகையை வைத்து வங்கியில் வாங்கப்பட்ட கடனின் மாதம் மாதம் லோனை கட்டிவிடலாம் என்றும்.

மேலும் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிந்தபின்பு அந்த நடிகர் சங்கம் கட்டிடத்தில் இருந்து வரும் வருமானம், மேலும் ஏற்கனவே 40 கோடி ரூபாய் ஃபிக்சட் டெபாசிட் செய்துள்ள அதிலிருந்து வரும் வட்டி தொகையும் இணைந்து ஒரு மிகப்பெரிய தொகை மாதம் தோறும் வரும்,ம் அப்படி வரும் பொழுது வங்கியில் வாங்கி இருந்த கடனை முழுவதும் அடைத்து விட்டு ஏற்கனவே நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கு நடிகர்களிடமிருந்து வசூலித்து டெபாசிட் செய்த 40 கோடியை எடுத்து,

யார் யாரெல்லாம் அந்த பணத்தை கொடுத்தார்களோ அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவோம் என்கின்ற ஒரு திட்டத்தில் தான் தற்பொழுது அனைத்து நடிகர்களிடமும் வசூல் செய்து வருகிறது நடிகர் சங்கம், அந்த வகையில் இது ஒரு வட்டி இல்லா கடனாக தற்பொழுது நடிகர்களிடம் அந்த தலா ஒரு கோடி வசூல் செய்து வருவதாகவும், அந்த வகையில் விஜய் சும்மா ஓன்று கொடுக்கவில்லை, ஒரு கை மாத்தாக தான் நடிகர் சங்கம் கட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.