தந்தை சிவகுமாரை விட்டு வெகு தொலைவுக்கு சென்ற சூர்யா… தந்தை – மகனுக்குள் என்ன பிரச்சனை தெரியுமா.?

0

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்பு சில வருடம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வந்த ஜோதிகா, இரண்டு குழந்தை பிறந்த பின்பு 36 வயதினிலே படத்தில் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார், இது அவருடைய மாமனார் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது. இருந்தும் தொடர்ந்து ஜோதிகா அடுத்தடுத்து சினிமாவில் நடித்து வந்தது அவருடைய குடும்பத்தில் மிக பெரிய புகைச்சலை உருவாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கணவன் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்த ஜோதிகா, மும்பை முதலீடு பெரும் லாபத்தை கொடுக்க, நிராதாரமாக கணவர், குழந்தைகள் என மும்பையில் செட்டிலானார் ஜோதிகா. ஆனால் கணவர் சூர்யாவை மும்பையில் முதலீடு செய்ய வைத்ததே, சென்னையில் அவருடைய கூட்டு குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பைக்கு தனி குடித்தனம் செல்வதற்காக ஜோதிகா போட்ட மாஸ்டர் பிளான் தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனாலும் கூட, தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருவதால் அடிக்கடி சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தமிழகம் வந்து செல்கிறார். இதனால் நிரந்தரமாக மும்பையில் கணவரை பிசியாக வைத்து தன்னை சுற்றியே கணவர் இருக்க வேண்டும் என திட்டமிட்ட ஜோதிகா அதற்கான நகர்வுகளை மிக சதுர்த்தியமாக நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஹிந்தி சினிமாவில், ஒரு வித மாஃபியா உண்டு, அந்த மாஃபியா கும்பலை தாண்டி புதியதாக யாரும் இந்தி சினிமாவில் வளர முடியாது, ஜோதிகாவின் தாய் – தந்தை இருவரும் இந்தி சினிமா துறை பின்னணியில் உள்ளவர்கள், அந்த வகையில் இந்தி சினிமா மாஃபியா கும்பல் என்று கூறப்படும் அந்த குறிப்பிட்ட தரப்பினருடன் ஜோதிகா குடுப்பதினாருக்கு நெருக்கிய தொடர்பு உண்டு,

இந்நிலையில் இந்தி சினிமாவில் தன்னுடைய செல்வாக்கை பயப்படுத்தி கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்க கதை கேட்டு வருகிறாராம் ஜோதிகா. மேலும் சூர்யாவுக்கு இந்தி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தால், தமிழ் சினிமா படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, இந்தி சினிமாவில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா, குறிப்பிட்ட சில காலத்திற்கு பின்பு மீண்டும் சென்னை திரும்பி தமிழகத்தில் நிரந்தரமாக செட்டில் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்பு இனி இல்லை என்பது போன்று அமைத்துள்ளது சூர்யாவின் நடவடிக்கைகள்.

மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார். சுமார் 9 ஆயிரம் சதுர அடி கொண்ட சூர்யாவின் புதிய வீட்டில், 5 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதியும், அழகான தோட்டத்துடன் மிக பிரமாண்டமாக உள்ளதாம். ஏற்கனவே மும்பையில் அவர் வீடு வாங்கி குடியேறிய நிலையில் தற்பொழுது மிக பெருந்தொகைக்கு ஆடம்பரமான புதிய வீடு ஒன்றை சூர்யா வாங்கியுள்ளதால்.

இனி நிரந்தரமாக சூர்யா மும்பையில் தங்கி விடுவதென முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அவருடைய கவனத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் சென்னைக்கு அவருடைய வருகை மிக குறைந்த அளவே இருக்கும் என்றும், இதனால் தந்தை சிவகுமாரை விட்டு மிக தொலைவான தூரத்திற்கு மனைவியுடன் சென்றுவிட்டார் சூர்யா என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here