ஆஸ்கர் விருது வாங்கிய RRR… ராஜமௌலி மீது கடும் கோபத்தில் தெலுங்கு சினிமா.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்ற 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. மேலும் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஏற்கனவே கோல்டன் குளோப் போன்ற சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றது.

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் சில திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்படும், அந்த வகையில் மிக பெரிய வெற்றியை பெற்று இந்தியா முழுவதும் கொண்டாட பட்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். திடப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்படவில்லை. இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பரிந்துரை செய்யவில்லை என்றாலும் கூட, ஆர்.ஆர்.ஆர். பட குழுவினர் ஏஜென்ட் மூலமாக நேரடியாக ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பித்தனர். கடுமையான போராட்டத்திற்கு பின்பு, ஆஸ்கர் விருதை வென்றுள்ள நாட்டு பாடல் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் பணியாற்றாத ஒரு இந்திய திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது,

இந்த நிகழ்வு இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக் குழுவினருக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது. ஆனால் தெலுங்கு சினிமாவில் பெரிதாக யாருக்கும் ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசை அமைப்பாளார் கீரவாணியை கண்டு கொள்ள வில்லை. இது குறித்து விசாரித்ததில், கீரவாணி மற்றும் ராஜமௌலி ஆகியோர் யாரும் RRR படத்தின் தயாரிப்பாளரை முன்னிலை படுத்த வில்லை என்றும்.

பல கோடி செலவு செய்து ராஜமௌலி பிரமாண்டமாக படம் எடுக்க உறுதுணையாக இருந்த தயாரிப்பளருக்கு ராஜமௌலி ஆஸ்கர் விருது விவகாரத்தில் முன்னிலை படுத்தாமல் உதாசீனப்படுத்தியுள்ளது தான், ஒட்டு மொத்த தெலுங்கு சினிமாவும் ராஜமௌலி மீது உள்ள கோபத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த இசை அமைப்பாளர் கிராமணி ஆஸ்கர் விருது பெற்று இருந்தாலும் மிக பெரிய அளவில் கொண்டாடப்பட வில்லை என கூறப்படுகிறது.